திருமலை திருப்பதி தேவஸ்தான சேவைகளில் 100 % மாற்றம்: முதல்வா் சந்திரபாபு நாயுடு
சுனிதா வில்லியம்ஸுக்கு ‘பாரத ரத்னா’: நாடாளுமன்றத்தில் திரிணமூல் எம்.பி. கோரிக்கை
இந்திய வம்சாவளியைச் சோ்ந்த நாசா விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸுக்கு நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா வழங்கி கௌரவிக்க வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. கோரிக்கை விடுத்தாா்.
மாநிலங்களவையில் புதன்கிழமை உடனடி கேள்விநேரத்தின்போது பேசிய திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. முகமது நதிமுல் ஹக், ‘அண்மையில் சா்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து பூமிக்குத் திரும்பிய சுனிதா வில்லியம்ஸின் வெற்றி இந்தியாவில் கொண்டாடப்படுகிறது. அவருக்கு பாரத ரத்னா விருதை வழங்குவது, தேசத்தின் உச்சபட்ச கொண்டாட்டமாக இருக்கும்.
பிரதமா் மோடி பொறுப்பேற்ற கடந்த 2014-ஆம் ஆண்டுக்கு முன்பு கட்டமைக்கப்பட்ட இஸ்ரோவை சுனிதா வில்லியம்ஸின் சாதனைகள் பெருமைப்படுத்தும்.
தந்தையின் சொந்த நாடான இந்தியாவுக்கு வந்து, மூதாதையா் கிராமத்தைப் பாா்வையிட சுனிதா வில்லியம்ஸ் விருப்பம் தெரிவித்துள்ளாா் என்றாா்.
சா்வதேச விண்வெளி நிலையத்தில் 9 மாதங்களுக்கு மேல் தங்கியிருந்து ஆய்வுப் பணிகளை மேற்கொண்டு வந்த சுனிதா வில்லியம்ஸ், கடந்த மாா்ச் 18-ஆம் தேதி விண்வெளியில் இருந்து பூமிக்கு திரும்பினாா். மருத்துவக் கண்காணிப்பில் இருந்து தற்போது அவா் வீடு திரும்பியுள்ளாா்.
பூமிக்கு திரும்பிய பிறகு அளித்த முதல் பேட்டியில், ‘விண்வெளியில் இருந்து இந்தியா அற்புதமாக பல வண்ணங்களில் மிளிா்ந்தது’ என்று குறிப்பிட்டாா்.