செய்திகள் :

உலகின் முதல் சிவாலயம்; நவகிரக பயம் நீக்கும் அபூர்வ தரிசனம் - உத்திரகோசமங்கை கும்பாபிஷேகம் ஸ்பெஷல்

post image

பாண்டிய நாட்டின் பதினான்கு சிவத் தலங்களுக்கு முன்பாக உருவான தலம் உத்திரகோசமங்கை. இலந்தை மரத்தினடியில் இறைவன் சுயம்பு மூர்த்தியாக எழுந்தருளிய இந்தத் தலத்தில்தான், சிவபெருமான் அம்பிகைக்கு வேதாகம ரகசியப் பொருளை உபதேசித்து அருளினார் என்கின்ற ஞான நூல்கள். ‘உத்திரம்’ என்றால் ரகசியம்; ‘கோசம்’ என்றால் உபதேசித்தல் என்று பொருள். இந்த அற்புதத்தையொட்டியே இந்தத் தலம் 'திருஉத்திரகோச மங்கை' என்று அழைக்கப்படுகிறது.

இதுவே உலகின் முதல் சிவாலயம் என்பார்கள் பெரியோர்கள். மூலவர் சுயம்புத் திருமேனியராக சதுர ஆவுடையாருடன் திகழ்கிறார். இறைவி மங்களாம்பிகை, திருக்கரத்தில் ருத்திராட்சம் ஏந்தியபடி காட்சி அருள்கிறாள்.
மண் தோன்றுவதற்கு முன்பு தோன்றிய மங்கை உத்திரகோசமங்கை என்பர் பெரியோர். ராவணனின் மனைவியான இத்தல இறைவனை வணங்கியதாகச் சொல்கிறது தலபுராணம். சிவபக்தனான ராவணன் - மண்டோதரி திருமணம் இங்குதான் நடைபெற்றது என்றும் சொல்கிறார்கள்.

உத்திரகோசமங்கை

ஈசனின் திருவிளையாடல்களில் ஒன்றான வலைவீசி மீன் பிடித்த விளையாடல் நடைபெற்ற தலம் இது. மீனவப் பெண்ணாகத் தோன்றிய அம்பிகையை சுவாமி கரம் பிடித்த தலமும் இதுதான்.

திருவாசகம் அருளிய மாணிக்கவாசகர் பிறப்பெடுக்கக் காரணமான தலமும் இதுவே. நவகிரகங்கள் ஆலய வழிபாட்டில் இல்லாத காலத்தில் தோன்றிய கோயில் இது என்பதால் இங்கு சூரியன், சந்திரன், செவ்வாய் ஆகிய 3 கோள்கள் மட்டுமே உள்ளன. இதுவே இந்த ஆலயத்தின் பழைமைக்கு மற்றுமொரு சான்று.

நடராஜர் சந்நிதிக்குப் பக்கத்திலேயே சஹஸ்ர லிங்க சந்நிதி உள்ளது. ஈசனிடம் வேத ரகசியம் கேட்க வந்த 1,000 முனிவர்களில் 999 பேர் ஈசனிடம் ஐக்கியமாகிவிட, எஞ்சி நின்ற ஒரு முனிவரே மாணிக்கவாசகராக மறுபிறப்பு எடுத்தார் என்கின்றன புராணங்கள். எனவே திருவாசகம் என்னும் வேதம் நமக்குக் கிடைக்கக் காரணமான தலமும் இதுவே.

இத்தலத்தின் சிறப்புகளில் ஒன்று மரகதலிங்கம் மற்றும் ஸ்படிக லிங்கம். தினமும் மதிய வேளையில் இவ்விரு லிங்கங்களுக்கும் அபிஷேகம் நடைபெறும் இதைக் கண்டாலே முக்தி நிச்சயம் என்பார்கள். இங்குள்ள தலவிருட்சமான இலந்தை 3,000 ஆண்டுகள் பழைமை வாய்ந்தது என்று சொல்கிரார்கள் விஞ்ஞானிகள்.

தினமும் அதிகாலையில் அம்பாள் சுவாமியை பூஜிப்பதாக ஐதிகம்.அதேபோல், மாணிக்கவாசகர் இறவா நிலை பெற்று ஈசனுக்கு அருகே அமர்ந்து அவருக்கு அன்னம் பாலிப்பதாக நம்பப்படுகிறது. திருப்பெருந்துறைக்கு அடுத்து மாணிக்கவாசகருக்கு ஈசன் தரிசனம் தந்த இடமும் இதுவே.

ஒரே நாளில் மூன்று வேளை மங்களநாதரை தரிசித்தால் வினைகள் நீங்கும் என்பது நம்பிக்கை. அதேபோன்று காசியிலும் தீராத பித்ரு சாபமும் இங்கு தீரும் என்கிறார்கள். இங்கு நடைபெறும் பள்ளியறை பூஜை மிகவும் விசேஷமானது. இரவு 7.30 மணிக்கு நடைபெறும் பள்ளியறை பூஜையில் கலந்துகொண்டு வழிபட்டால், திருமணத் தடைகள் நீங்கி கல்யாணம் கைகூடும்; பிரிந்த தம்பதிகள் ஒன்று சேருவார்கள் என்பது நம்பிக்கை.

பழைமையும் பெருமையும் வாய்ந்த இந்த ஆலயம் சுமார் 20 ஏக்கர் பரப்பளவில் ஐந்து கோபுரங்களுடன் அமைந்திருக்கிறது. இங்குள்ள அக்னி தீர்த்தம், மங்கள தீர்த்தம் ஆகியவை ஏழு ஜன்ம பாவம் தீர்க்கும் சக்தி கொண்டவை என்கிறார்கள். அதேபோன்று கோயிலுக்கு வெளியே பிரம்ம தீர்த்தமும் அதற்கு அருகே மொய்யார்தடம் பொய்கைத் தீர்த்தம், வியாச தீர்த்தம், சீதள தீர்த்தம் ஆகியவை உள்ளன.

இப்படிப்பட்ட அற்புதமான தலத்தில் வரும் ஏப்ரல் 4 -ம் தேதி காலை 9 முதல் 10.20 மணிக்குள் கும்பாபிஷேகம் நடக்க உள்ளது. 15 ஆண்டுகளுக்குப் பிறகு இத்தலத்தில் கும்பாபிஷேகம் நடக்க இருப்பதையொட்டித் திருப்பணிகள் முடிவடைந்து கடந்த பிப்ரவரி 16 ம் தேதி யாகசாலை பந்தக்கால் முகூர்த்தம் நடப்பட்டது. 101 குண்டங்கள் அமைக்கப்பட்டு யாகசாலை சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 1 முதல் யாகசாலை பூஜைகள் நடக்க உள்ளன. அதன்பின் 4 -ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.

உத்தரகோசமங்கை மங்களநாதர் கோயில்

இதையொட்டி உத்திரகோசமங்கையில் எங்கு பார்த்தாலும் சிவாசார்யப் பெருமக்களாகக் காணப்படுகிறார்கள். இன்று யாகசாலைக்குரிய புனித நீரை சிவாசார்யர்கள் எடுத்துவந்து சேர்த்தனர். இப்படி கும்பாபிஷேகப் பணிகள் கோலாகலமாக நடந்துகொண்டிருக்கும் இந்தத் தருணத்தில் சிவபக்தர்களின் மனம் மகிழச் செய்யும் செய்தியைக் கோயில் நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

யாகசாலை பூஜைகள் தொடங்கும் ஏப்ரல் 1 முதல் கும்பாபிஷேக நாள்வரை மரகத நடராஜரை சந்தனக் காப்பு இல்லாமல் தரிசிக்கலாம் என்பதுதான் அது.

மரகதநடராஜர் என்ன விசேஷம்?

இங்குள்ள நடராஜர் திருமேனி பச்சை மரகதத்தால் ஆனது. விலை மதிக்க முடியாத மாபெரும் பொக்கிஷமாகத் திகழும் ஐந்தரை அடி உயரம் கொண்ட இந்த நடராஜர் திருமேனி உலக அதிசயம் என்றே சொல்லலாம். இந்தத் திருமேனியில் எப்போதும் சந்தனக் காப்பு பூசியிருப்பார்கள். மார்கழித் திருவாதிரைக்கு முதல் நாள் மட்டுமே சந்தனம் இல்லாமல் இந்த நடராஜரை தரிசிக்க முடியும். இவரின் திருமேனியில் சாத்தப்படும் சந்தனம் மருத்துவக் குணம் கொண்டது; அனைத்து நோய்களையும் தீர்க்க்க வல்லது என்கிறார்கள்.

'மத்தளம் முழங்க மரகதம் பொடிபடும்' என்பார்கள். அவ்வளவு நுட்பமானது மரகதக் கல். அதில் நுட்பமாக நடராஜர் திருமேனி அமைந்திருப்பதால் கோயிலில் இசைக்கும் வாத்திய ஓசையால் திருமேனிக்கு பாதிப்பு ஏற்படாதபடி இருக்க சந்தனக் காப்பு பூசப்படுகிறது. ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே சந்தனக் காப்பு களையப்பட்டு பச்சைத் திருமேனி தரிசனம் வாய்க்கும்.

சந்தனப் பூச்சின்றி உத்தரகோசமங்கை மரகத நடராஜர்

கும்பாபிஷேகத்தை ஒட்டி, ஏப்ரல் 1 மாலை 5:00 மணிக்கு சந்தனம் களைதல் நிகழ்ச்சி நடைபெறும். அதன்பின் 2, 3 மற்றும் 4 ஆகிய மூன்று நாளும் மரகத நடராஜரை பக்தர்கள் தரிசிக்கலாம். மரகத நடராஜரை தரிசித்தால் வினைகள் தீரும். நவகிரக தோஷங்கள் விலகும் என்பது நம்பிக்கை. இந்த ஆண்டு ஏற்கெனவே ஜனவரி மாதம் திருவாதிரையில் மரகத நடராஜர் தரிசனம் கிடைத்த நிலையில் மீண்டும் மரகத நடராஜர் தரிசனம் கிடைக்க இருப்பதை எண்ணி சிவபக்தர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்திருக்கிறார்கள். எனவே வாய்ப்பிருக்கும் பக்தர்கள் உத்திரகோசமங்கை சென்று கும்பாபிஷேகத்தைத் தரிசித்து மங்களநாதரின் அருளைப் பெறலாம். கூடவே மரகத நடராஜரையும் தரிசித்து சகல வரங்களையும் பெறலாம்.

பாம்புக் கடியில் இருந்து மக்களை பாதுகாக்கும் கோயில் - 11 கிராம மக்களின் நம்பிக்கை என்ன?

உத்தரபிரதேசத்தின் சஹாரன்பூர் மாவட்டத்தில் உள்ள ஜதௌடா பாண்டா என்ற கிராமத்தில் அமைந்துள்ள இந்த புனிதத் தலம், சுற்றியுள்ள 12 கிராம மக்களை பாம்பு கடியில் இருந்து பாதுகாப்பதாக கூறுகின்றனர். பல நூற்றாண்டுகள... மேலும் பார்க்க

வாழ்த்துங்களேன்!

பிறந்த நாள், திருமண நாள், சஷ்டியப்த பூர்த்தி, சதாபிஷேகம்... இவை போன்று இன்னும் பல்வேறு இனிய வைபவங்களைக் காணும் வாசகர்களுக்குச் சக்தி விகடனின் வாழ்த்துகள்! அன்பார்ந்த வாசகர்களே!உங்கள் சக்தி விகடன் 21-ம... மேலும் பார்க்க

சனி பரிகாரக் கோயில்கள்: `துன்பங்கள் நீங்கி நிம்மதி பிறக்கும்' - திருநள்ளாறுக்கு இணையான 5 இடங்கள்

திருவாதவூர் திருமறை நாதர்திருவாதவூர் சனிப்பெயர்ச்சி 2025 சிம்மம் : புதியவர்களிடம் கவனம்; ஆரோக்கியத்தில் அக்கறை - என்ன பலன்கள் உங்களுக்கு?மதுரையிலிருந்து வடக்கே 25 கி.மீ தொலைவிலும், மேலூரிலிருந்து மேற்... மேலும் பார்க்க

`கனவில் வந்தாள்... கொலுசு கேட்டாள்' - வாழ்வு மாற, வசந்த நவராத்திரியில் நீங்கள் வணங்க வேண்டிய தலம்

வாழ்வை மாற்றும் வசந்த நவராத்திரி அன்னை ஆதிசக்தியை வழிபடும் நாள்களில் முக்கியமானவை நவராத்திரி பண்டிகை. ஓர் ஆண்டில் நான்கு நவராத்திரிகள் கொண்டாடப்படும். அவை, சியாமளா நவராத்திரி (தை மாதம்,) வசந்த நவராத்த... மேலும் பார்க்க

சர்வ வஸ்ய ஹோமம்: `பாபாவின் அற்புதம் காண வாருங்கள்' - சங்கல்பம் செய்துகொள்ள சகலமும் உங்கள் வசமாகும்

2025 ஏப்ரல் 10-ம் நாள் வியாழக்கிழமை கன்னியாகுமரி பொற்றையடி ஷீரடி சாய்பாபா ஆனந்த ஆலயத்தில் சர்வ வஸ்ய ஹோமமும் சிறப்பு பூஜையும் நடைபெற உள்ளது. இந்த யாகத்தால் உங்கள் விருப்பமான காரியங்களை சிறப்பாக நிறைவேற... மேலும் பார்க்க

சத்யநாராயண பூஜை: சங்கல்பம் செய்து கொள்ள சகல வேண்டுதலும் நிறைவேறும்; சாய்பாபாவின் அற்புதம் காணுங்கள்

2025 ஏப்ரல் 10-ம் நாள் வியாழக்கிழமை பங்குனி வளர்பிறை திரயோதசி நன்னாளில் இங்கு பிரமாண்ட விழாவும் சத்யநாராயண பூஜையும் நடைபெற உள்ளது. இந்த பூஜையால் அமைதியான வாழ்வும், விரும்பிய ஐஸ்வரியங்களும் கிடைக்கும் ... மேலும் பார்க்க