செய்திகள் :

சர்வ வஸ்ய ஹோமம்: `பாபாவின் அற்புதம் காண வாருங்கள்' - சங்கல்பம் செய்துகொள்ள சகலமும் உங்கள் வசமாகும்

post image

2025 ஏப்ரல் 10-ம் நாள் வியாழக்கிழமை கன்னியாகுமரி பொற்றையடி ஷீரடி சாய்பாபா ஆனந்த ஆலயத்தில் சர்வ வஸ்ய ஹோமமும் சிறப்பு பூஜையும் நடைபெற உள்ளது. இந்த யாகத்தால் உங்கள் விருப்பமான காரியங்களை சிறப்பாக நிறைவேற்றிக் கொள்ள முடியும் என்பது நம்பிக்கை.

சர்வ வஸ்ய ஹோமம்

சங்கல்ப விவரங்களுக்கு: 044-6680 2980/07

ஹோமத்தில் கலந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.

அட்டமா(8) சித்திகளில் வசியம் ஆறாவது என்கின்றன சித்தர் நூல்கள். வசித்துவம் என்றால் எல்லோரையும் தன் வயப்படுத்துதல் என்று பொருள். அட்டமாசித்திகளையும் அற்புதமாக செய்தவர் ஸ்ரீசாய்பாபா. அவர் காலத்தில் மட்டுமல்ல இன்றும் அவருடைய சித்துக்களால் பலன் பெறுபவர்கள் அநேகம். சாய் பாபா சகல நதிகளும் சங்கமிக்கும் சாகரம் போன்றவர். சகல ஞானங்களும் அவருக்குள் நிறைந்திருந்தன. தன்னிடம் ஞானம் வேண்டி வருபவர்களுக்கு அவர்களே அதைத் தேடி அடையும் சூட்சுமட்தைக் கற்றுக்கொடுப்பார். 

இன்றும் கனவில் வந்தார்; தீர்வுகள் சொன்னார். யாரிடமோ என் துன்பத்தைச் சொல்லி அவர் வழியே துன்பங்கள் துடைத்தார் என்றெல்லாம் பக்தர்கள் கூறுவதுண்டு. இப்படி, பாபா பக்தர்களின் பொருட்டு அவர் நிகழ்த்திய அருளாடல்கள் அனைத்தும் அலாதியானவை. இன்று லட்சக்கணக்கான பக்தர்கள் தங்கள் வாழ்வில் நிம்மதியும் ஆனந்தமும் நிலைத்திருக்க ஷீர்டி சாயிநாதரைப் பணிந்து வருகிறார்கள்.

கன்னியாகுமரி பொற்றையடி ஷீரடி சாய்பாபா ஆனந்த ஆலயம்

சாய்பாபா ஆதியும் அந்தமும் இல்லாதவர் என்பதுடன் கிருஷ்ணராகவும், ராமராகவும், சிவனாகவும், மாருதியாகவும் தோன்றியவர்களின் கலியுக திருவடிவமே ஸ்ரீசாயி என்பது 'ஸ்ரீகிருஷ்ண ராம சிவ மாருதி ரூபாயை நம:’ என்ற நாமாவளியில் இருந்து நமக்குப் புரிய வருகிறது. இந்த நாம வரிசையில் உள்ள தெய்வங்களாகவும் பல்வேறு தருணங்களில் தம்முடைய பக்தர்களுக்கு அருட்காட்சியும் தந்திருக்கிறார். இவருடைய வசீகர லீலைகளால் மனம் கவர்ந்த பக்தர்கள் இவரை பல்வேறு தலங்களில் தரிசித்து வருகின்றனர். அவ்வகையில் கன்னியாகுமரியிலும் ஒரு பிரமாண்ட ஆலயம் எழும்பி உள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் மருந்துவாழ் மலை அருகே பொற்றையடியில் அமைந்திருக்கிறது ஷீரடி சாய்பாபா ஆனந்த ஆலயம். இங்கே ஆனந்தமயமான ஸ்ரீசாய்பாபா அருள்பாலித்துக்கொண்டிருக்கிறார். 13 ஆண்டுகளுக்கு முன்பு எழுந்தருளிய ஆனந்த பாபா பக்தர்கள் குறைகள் போக்கி வரமருள்கிறார். இந்த ஆண்டு 13-வது வருஷாபிஷேக நாளில் (10-4-2025) பிரமாண்ட அபிஷேக ஆராதனைகள் நடைபெற உள்ளன, வாசகர்கள் இங்கு சங்கல்பம் செய்து கொண்டால் சகல வேண்டுதலும் நிறைவேறும் என்பது நிச்சயம்.

2009-ம் ஆண்டு இந்த பகுதியில் குருஜி சி.பி.சத்பதி மற்றும் டி.கே.எஸ் ஐயா அவர்களின் முயற்சியால் ஆலயப் பணிகள் தொடங்கி 4.4.2012 அன்று பங்குனி மாத பூர நட்சத்திர நாளில் இந்த ஆனந்த சாய்பாபா ஆலயத்துக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக இந்த ஆண்டு 13-வது வருஷாபிஷேக நன்னாளை ஒட்டி இங்கு 3006 லிட்டர் பாலாபிஷேகமும் மற்றும் வெவ்வேறு திரவியங்களால் மகா அபிஷேகங்களும் பல்வேறு ஆராதனைகள், புறப்பாடுகள் நடைபெற உள்ளன. சர்வ வஸ்ய யாகம் மற்றும் கோபுர கலச அபிஷேகம் சிறப்பு ஆரத்திகள் நடைபெற உள்ளன. கலைமாமணி வீரமணி ராஜு மற்றும் அபிஷேக் ராஜு அவர்களின் இசைக் கச்சேரியும் நடைபெற உள்ளது.

கன்னியாகுமரி பொற்றையடி ஷீரடி சாய்பாபா ஆனந்த ஆலயம்

சங்கல்ப விவரங்களுக்கு: 044-6680 2980/07

ஹோமத்தில் கலந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.

அன்பார்ந்த வாசகர்களே!


2025 ஏப்ரல் 10-ம் நாள் வியாழக்கிழமை பங்குனி வளர்பிறை திரயோதசி நன்னாளில் இங்கு பிரமாண்ட விழாவும் சர்வ வஸ்ய யாகமும் சிறப்பு பூஜையும் நடைபெற உள்ளது. நீங்களும் இந்த சர்வ வஸ்ய ஹோமத்தில் பங்கு கொண்டு அற்புத பலன்களைப் பெறுங்கள். கன்னியாகுமரி பொற்றையடி ஆனந்த ஸ்ரீசாய்பாபாவின் அருளைப் பெறுங்கள்.

இந்த சர்வ வஸ்ய ஹோமத்தில் கலந்து கொள்வதால் என்ன பலன்கள்:

தன தான்ய வசிய மகிமையால் உங்கள் வீட்டில் தரித்திரம் ஒழிந்து பொன்னும் பொருளும் சேரும். உங்கள் விருப்பமான காரியங்கள் நிறைவேறும். உங்கள் வீட்டில் நடக்கும் மோதல் சண்டைகள் நீங்கும். வழக்கு வம்புகளில் தீர்வு கிடைக்கும். உங்கள் சொல்பேச்சு கேட்காத பிள்ளைகள் மனம் மாறுவர். குடும்ப ஒற்றுமை வளரும். உங்கள் விருப்பப்படி உங்கள் உறவுகள் நடந்து கொள்வர். நோய், விபத்து, ஆபத்துக்களில் இருந்து விடுபடலாம். பிரச்னை செய்யும் நபர்களை உங்கள் வசமாக்கலாம். உங்கள் உடலும் உள்ளமும் பிரகாசமாகி உங்கள் வாழ்வை வளப்படுத்தலாம்.

சர்வ வஸ்ய ஹோமம்


வாசகர்களின் கவனத்துக்கு!

இந்த ஹோம வழிபாட்டில் வாசகர்களே கர்த்தாக்கள் என்பதால், அவர்களின் பங்களிப்பும் அவசியம் எனும் அடிப்படையில், சங்கல்பக் கட்டணம் (ரூ.500/- மட்டும்) நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சங்கல்பத்துக்கு முன்பதிவு செய்யும் வாசகர்களின் பிரார்த்தனைகள், ஹோம வழிபாட்டில் சமர்ப்பிக்கப்படும். அத்துடன், அவர்களுக்குப் பிரசாதமாக விசேஷ ரட்சை, உதி பிரசாதம் அனுப்பிவைக்கப்படும் (தமிழகம் - புதுவை பகுதிகளுக்கு மட்டும்). உங்கள் தெளிவான முகவரியைக் குறிப்பிடவும். அது, பிரசாதம் சீக்கிரம் வந்தடைய உதவும். குறிபிட்ட நாளில் வாசகர்கள், சக்தி விகடன் முகநூல் பக்கத்தில் இந்த வழிபாட்டு வைபவங்களை வீடியோ வடிவிலும் தரிசிக்கலாம்.

முன்பதிவு மற்றும் சங்கல்ப விவரங்களுக்கு:
044-6680 2980/07

பதிவு செய்ய இந்த QR - கோடை பயன்படுத்திக் கொள்ளவும்.

SARVA VASYA HOMAM

சங்கல்ப விவரங்களுக்கு: 044-6680 2980/07

ஹோமத்தில் கலந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.

`கனவில் வந்தாள்... கொலுசு கேட்டாள்' - வாழ்வு மாற, வசந்த நவராத்திரியில் நீங்கள் வணங்க வேண்டிய தலம்

வாழ்வை மாற்றும் வசந்த நவராத்திரி அன்னை ஆதிசக்தியை வழிபடும் நாள்களில் முக்கியமானவை நவராத்திரி பண்டிகை. ஓர் ஆண்டில் நான்கு நவராத்திரிகள் கொண்டாடப்படும். அவை, சியாமளா நவராத்திரி (தை மாதம்,) வசந்த நவராத்த... மேலும் பார்க்க

சத்யநாராயண பூஜை: சங்கல்பம் செய்து கொள்ள சகல வேண்டுதலும் நிறைவேறும்; சாய்பாபாவின் அற்புதம் காணுங்கள்

2025 ஏப்ரல் 10-ம் நாள் வியாழக்கிழமை பங்குனி வளர்பிறை திரயோதசி நன்னாளில் இங்கு பிரமாண்ட விழாவும் சத்யநாராயண பூஜையும் நடைபெற உள்ளது. இந்த பூஜையால் அமைதியான வாழ்வும், விரும்பிய ஐஸ்வரியங்களும் கிடைக்கும் ... மேலும் பார்க்க

சமயபுரம் தல வரலாறு: அர்த்த ஜாமத்தில் கொலுசுச் சத்தம்; அம்மனே நமக்காக விரதம் இருக்கும் அதிசயம்

ஶ்ரீரங்கம், 108 திவ்ய தேசங்களில் தலைமைப்பீடம். அங்குதான் ஆதியில் கோயில் கொண்டிருந்தாள் வைஷ்ணவி. அண்ணன் அரங்கன் அமைதியே உருவான சாந்தமூர்த்தி. ஆனால் தங்கையோ ருத்ர ரூபிணி. அவளின் ருத்ராம்சம் பொறுக்கமுடிய... மேலும் பார்க்க

`சேய்களைக் காத்து செல்வம் அருளும்' கொரட்டூர் சீயாத்தம்மன் கோயில் விளக்கு பூஜை; பதிவு செய்யுங்கள்

2025 மார்ச் 28-ம் தேதி சென்னை கொரட்டூர் பாடலாத்ரி சீயாத்தம்மன் கோயிலில் மாலை 6 மணி அளவில் சக்தி விகடன் வழங்கும் திருவிளக்கு பூஜை நடைபெற இருக்கிறது. இதில் நீங்களும் கலந்துகொண்டு அருள்பெறலாம். அதுகுறித்... மேலும் பார்க்க

கச்சத்தீவு: விமர்சையாக நடைபெற்ற அந்தோணியார் ஆலய திருவிழா; குவிந்த இருநாட்டு பக்தர்கள் | Photo Album

Katchatheevu row: கச்சத்தீவு அரசியல் நமக்கு என்ன கொடுக்கும்? - ஒரு விரிவான அலசல்!வேட்டை நாய்கள் - Gangs of தூத்துக்குடி -இப்போது விகடன் ப்ளேயில்..!Link : Part 01 : https://tinyurl.com/Vettai-Naigal-Pa... மேலும் பார்க்க

வாழ்த்துங்களேன்!

பிறந்த நாள், திருமண நாள், சஷ்டியப்த பூர்த்தி, சதாபிஷேகம்... இவை போன்று இன்னும் பல்வேறு இனிய வைபவங்களைக் காணும் வாசகர்களுக்குச் சக்தி விகடனின் வாழ்த்துகள்! அன்பார்ந்த வாசகர்களே!உங்கள் சக்தி விகடன் 21-ம... மேலும் பார்க்க