மறைந்த சுஷாந்த் சிங்கின் தோழியிடம் மன்னிப்பு கேட்ட முன்னாள் எம்.பி.
டூரிஸ்ட் பேமிலி வெளியீட்டுத் தேதி!
நடிகர் சசிகுமார் நடித்துள்ள டூரிஸ்ட் பேமிலி திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் சசிகுமார் நடிப்பில் வெளியான அயோத்தி, கருடன், நந்தன் தொடர்ந்து வெற்றி பெற்று மீண்டும் சசிகுமாருக்கு நல்ல வணிகத்தை ஏற்படுத்திக் கொடுத்துள்ளன.
இவர் தற்போது அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் டூரிஸ்ட் ஃபேமிலி படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தில் இவருடன் இணைந்து சிம்ரன், யோகி பாபு, எம்.எஸ்.பாஸ்கர், மிதுன் ஜெய்சங்கர், கமலேஷ் ஆகியோர் நடித்துள்ளனர்.
குட் நைட், லவ்வர் படங்களை தயாரித்த மில்லியன் டாலர் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. படத்தின் டீசர் மற்றும் முகை மழை என்கிற பாடல் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.
இதையும் படிக்க: பாரதிராஜாவின் மகன் மனோஜ் காலமானார்
டீசரில் இலங்கைத் தமிழர்களாக நடித்துள்ள சசிகுமார் - சிம்ரனின் இலங்கை தமிழ் பேச்சு ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

இந்த நிலையில், இப்படம் மே 1 ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.