MI vs KKR: கொல்கத்தாவை வாரிச் சுருட்டிய 23 வயது அறிமுக பவுலர்; வெற்றிக் கணக்கைத்...
மியாமி ஓபனில் மெஸ்ஸி: இறுதிப் போட்டிக்கு முன்னேறிய ஜோகோவிச்!
மியாமி ஓபனில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச் அரையிறுதியில் வென்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.
இந்தப் போட்டியில் 6-2, 6-3 என ஜோகோவிச் கிரிகோர் டிமிட்ரியை வீழ்த்தினார்.
இந்தப் போட்டியைப் பார்க்க ஆர்ஜென்டீன கால்பந்து வீரரும் இன்டர் மியாமி வீரருமான மெஸ்ஸி வந்திருந்தார்.
நடப்பு சாம்பியனான ஆர்ஜென்டீன அணி 2026 உலகக் கோப்பைக்கு தகுதி பெற்றுள்ளது.
ரசிகர்கள் பலரும் மெஸ்ஸியுடன் புகைப்படங்களை எடுத்துகொண்டனர்.
ஜொகோவிச் இறுதிப் போட்டியில் மென்சிக் உடன்மோதுகிறார். இந்தப் போட்டி நாளை (மார்ச்.30) நடைபெறவிருக்கிறது.
37 வயதாகும் ஜோகோவிச் தனது 100ஆவது பட்டத்துக்காக காத்திருக்கிறார்.
மியாமி ஓபனில் வென்றால் அந்தச் சாதனையும் நிகழ்ந்துவிடும். ஏற்கனவே, அதிக கிராண்ட்ஸ்லாம் பட்டங்கள் வென்றவராக ஜோகோவிச் இருப்பது குறிப்பிடத்தக்கது.