Doctor Vikatan: மட்டன், சிக்கன், ஃபிஷ், எக், வெஜ்... பிரியாணியில் எது ஹெல்த்தி?
அறிமுகப் போட்டியிலேயே 4 விக்கெட்டுகள்! யார் இந்த அஸ்வனி குமார்?
அறிமுகப் போட்டியின் முதல் பந்திலேயே ரஹானே உள்பட 3 விக்கெட்டைத் தூக்கிய மும்பை வீரர் அஸ்வனி குமார், அணியில் நிரந்தரமாக ஜொலிப்பாரா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
18-வது ஐபிஎல் தொடரின் லீக் சுற்றின் 12-வது போட்டி மும்பையின் வான்கடே மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் முன்னாள் சாம்பியன்கள் மும்பை இந்தியன்ஸ் - கொல்கத்தா அணிகள் மோதுகின்றன.
இதில், டாஸ் வென்ற மும்பை கேப்டன் ஹார்திக் பாண்டியா முதலில் பந்து வீசுவதாகத் தெரிவித்தார். மும்பை அணியில் அஸ்வனி குமார் என்பவருக்கு முதல்முறையாக வாய்ப்பு அளிக்கப்பட்டது.
முதலாவது மற்றும் 2-வது ஓவர்கள் முறையே பவுல்ட் - தீபக் சஹர் வீச மூன்றாவது ஓவரை வீசும் வாய்ப்பு அஸ்வனி குமாருக்கு வழங்கப்பட்டது. அறிமுகமான போட்டியின் முதல் பந்திலேயே கொல்கத்தா அணியின் கேப்டன் ரஹானே விக்கெட்டை வீழ்த்தினார். ரிங்கு சிங் விக்கெட்டை வீழ்த்தியதுடன், மணீஷ் பாண்டேவையும், ரஸ்ஸலையும் தூக்கினார்.
யார் இந்த அஸ்வனி குமார்?
23 வயதான அஸ்வனி குமார் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர். இடக்கை வேகப்பந்து வீச்சாளரான அஸ்வனி குமார் ஆட்டத்தின் இறுதிக்கட்ட 16-20 வரையிலான ஓவர்களில் பந்துவீசுவதில் திறமை வாய்ந்தவர். கடந்த தொடரில் பஞ்சாப் அணியில் அஸ்வனி இடம்பெற்றிருந்தாலும், அவருக்கு விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை. கடந்தாண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற மெகா ஏலத்தில் மும்பை அணி அவரை ரூ.30 லட்சத்துக்கு ஏலத்தில் எடுத்தது.
இதையும் படிக்க: ராஜஸ்தான் பொறுப்பு கேப்டன் ரியான் பராக்கிற்கு அபராதம்!
2022 ஆம் ஆண்டு சையத் முஷ்டாக் அலி தொடரில் அறிமுகமான அஸ்வனி 4 போட்டிகளில் மட்டும் விளையாடினார். இதில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அதுமட்டுமின்றி இவர் 2 முதல் தரப் போட்டிகளிலும், 4 லிஸ்ட் ஏ போட்டிகளிலும் விளையாடியிருக்கிறார். இவர் முதன் முதலாக பஞ்சாப் டி20 தொடரில் தெர் இ-பஞ்சாப் அணிக்காக விளையாடினார். அதில், பிஎல்வி பிளாஸ்டர் அணிக்காக விளையாடி 4/36 விக்கெட்டை வீழ்த்தினார்.
சிறந்த வீரர்களால் எங்கள் அணி இல்லை. சிறந்த வீரர்களை உருவாக்கும் அணி என அனைவரால், சிறப்பிக்கப்படும் மும்பை இந்தியன்ஸ் அணி, அஸ்வனி குமார் மட்டுமின்றி மேலும், இரண்டு அறிமுக வீரர்களுக்கு வாய்ப்பளித்துள்ளது.
கேரள வீரர் விக்னேஷ் புதூர் சென்னைக்கு எதிரான போட்டியில் சிறப்பாக விளையாடி 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அவரைத் தவிர்த்து ஆந்திர வீரர் சத்திய நாராயணாவும் 2 போட்டிகளில் விளையாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: 1.78 கோடி பின்தொடர்வோர்.. இன்ஸ்டாகிராமில் சிஎஸ்கேவை முந்திய ஆர்சிபி!