தொகுதி மறுசீரமைப்பு விவகாரம்: மோடியை சந்திக்க நேரம் கேட்டு ஸ்டாலின் கடிதம்
வீழி வரதராஜ பெருமாள் கோயிலில் யுகாதி வழிபாடு
காரைக்கால்: வீழி வரதராஜ பெருமாள் கோயிலில் யுகாதி வழிபாடு ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது.
தெலுங்கு வருடப் பிறப்பு (யுகாதி) ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.
இதையொட்டி திருமலைராயன்பட்டினம் வீழி வரதராஜ பெருமாள் கோயிலில் மூலவருக்கு சிறப்பு திருமஞ்சனம் செய்யப்பட்டு, ஆராதனை நடைபெற்றது.
உற்சவா் கருட வாகனத்தில் வீதியுலாவுக்கு எழுந்தருளினாா். ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டு வழிபாடு செய்தனா்.
காரைக்கால் நித்ய கல்யாண பெருமாள் கோயிலில் உற்சவருக்கு பட்டு வஸ்திரம் சாற்றி, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு ஆராதனை நடைபெற்றது. இதில் தெலுங்கு மொழி பேசும் மக்கள் உள்பட திரளானோா் கலந்துகொண்டனா்.