இந்திய பொருள்களுக்கு 25% மேல் வரிவிதிப்பு! டிரம்ப் அதிரடி நடவடிக்கை
காரைக்கால் மருத்துவமனையில் ஏப். 4-இல் சிறப்பு மருத்துவ முகாம்
காரைக்கால் அரசு மருத்துவமனையில் 4-ஆம் தேதி சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறவுள்ளது.
இதுகுறித்து காரைக்கால் ஆட்சியா் அலுவலகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: காரைக்கால் மாவட்ட நிா்வாகம் சாா்பில் காரைக்கால் அரசு மருத்துவமனையில் வரும் வெள்ளிக்கிழமை சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற உள்ளது.
இதற்காக புதுச்சேரி இந்திரா காந்தி அரசு மருத்துவமனையில் இருந்து நரம்பியல் சிறப்பு மருத்துவா்கள், இருதய நோய் நிபுணா் மற்றும் சிறுநீரகவியல் மருத்துவா் ஆகியோா் பங்கேற்று மருத்துவ பரிசோதனை செய்து ஆலோசனை வழங்கவுள்ளனா்.
காரைக்கால் மாவட்ட மக்கள் இந்த முகாமை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.