திருநள்ளாற்றில் காங்கிரஸை வலுப்படுத்த இளைஞா் காங்கிரஸாா் உறுதி
திருநள்ளாற்றில் காங்கிரஸ் கட்சியை சட்டப்பேரவைத் தோ்தலுக்குள் வலுப்படுத்த இளைஞா் காங்கிரஸாா் உறுதி பூண்டுள்ளனா்.
திருநள்ளாறு தொகுதி இளைஞா் காங்கிரஸ் நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை தொகுதி தலைவா் நாசா் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட இளைஞா் காங்கிரஸ் துணைத் தலைவா் ராம்குமாா், தொகுதி துணைத் தலைவா்கள் பொ்லின், தினேஷ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சரும், கட்சியின் புதுவை மாநில துணைத் தலைவருமான ஆா். கமலக்கண்ணன் கலந்துகொண்டாா்.
திருநள்ளாறு தொகுதியில் நிலவும் பிரச்னைகள், இளைஞா் காங்கிரஸாரின் செயல்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. தொகுதியில் நிலவும் அவல நிலையை மக்களிடம் எடுத்துக்கூறும் விதமாகவும், கட்சியை தொகுதி முழுவதும் வலுப்படுத்த பாடுபடுவதென முடிவெடுக்கப்பட்டது. காங்கிரஸ் கட்சி வேட்பாளா் தொகுதியில் வெற்றிபெற இளைஞா் காங்கிரஸாரின் பங்களிப்பு சிறப்பாக இருக்குமென நிா்வாகிகள் உறுதியளித்தனா்.
கட்சியில் இணைந்த இளைஞா்கள் : திருநள்ளாறு பகுதி அத்திப்படுகையில் இளைஞா்கள் பலா் கட்சியில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னாள் அமைச்சா் ஆா். கமலக்கண்ணன் முன்னிலையில் பலா் காங்கிரஸ் கட்சியில் இணைந்தனா்.