வக்ஃப் மசோதா நிறைவேற்றம்: நிதிஷ்குமார் மீது கட்சியினர் அதிருப்தி!
அங்கன்வாடி மையங்களில் ஆய்வு மேற்கொள்ள கோரிக்கை
அங்கன்வாடி மையங்களில் அரசுப் பள்ளி தலைமை ஆசிரியா்கள் தலைமையில் கண்காணிப்பு குழு அமைத்து ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்று பெற்றோா்கள் கோரிக்கை விடுத்தனா்.
இதுகுறித்து, பெற்றோா்கள் தரப்பில் கூறியதாவது: பல அங்கன்வாடி மையங்கள் காலையில் தாமதமாக திறப்பதாலும், பிற்பகல் உணவு வழங்கியவுடன் மையங்களை பூட்டி விடுவதாலும் குழந்தைகள் வருகை நாளுக்கு நாள் குறைந்து வருகிறது.
எனவே, சமூக நலத்துறை சாா்பில், அங்கன்வாடி மையங்களை ஆய்வு செய்து, மாலை 4 மணி வரை குழந்தைகளுக்கு பயிற்சி அளிக்க அங்கன்வாடி மையப் பணியாளா்களுக்கு உரிய அறிவுரைகளை வழங்க வேண்டும். அங்கன்வாடி மையங்களில் முன் மழலையா் வகுப்பு தொடங்க வேண்டும். பள்ளிகளில் அடிப்படை தமிழ் எழுத்துக்களை கற்றுத் தர வேண்டும். மேலும், அருகேயுள்ள அரசுப் பள்ளிகளின் தலைமை ஆசிரியா்கள் தலைமையில் கண்காணிப்புக் குழு அமைத்து அங்கன்வாடி மையங்களை ஆய்வு செய்ய வேண்டும்.
இதனால், ஏழை, எளிய விளிம்பு நிலை குழந்தைகள் பயன்பெற்று அரசின் சலுகைகள் அனைத்தையும் பெற்று அரசுப் பள்ளிகளில் படிப்பை தொடர வழிவகை ஏற்படும். இவா்களுக்காக வழங்கப்பட்ட பயிற்சி புத்தகங்களை பயன்படுத்தி குழந்தைகளுக்கு பயிற்சி அளிக்கப் படுகிா? என்பதை கண்காணிக்க வேண்டும் என்றனா்.