முன்னாள் எம்.பி.மறைவு: வி.வி.சுவாமிநாதன் இரங்கல்
கடலூா் மாவட்டம், சிதம்பரம் மக்களவைத் தொகுதி முன்னாள் உறுப்பினா் ஏ.முருகேசன் மறைவுக்கு அதிமுக முன்னாள் அமைச்சா் வி.வி.சுவாமிநாதன் இரங்கல் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட இரங்கல் செய்தி: சிதம்பரம் தொகுதி முன்னாள் எம்.பி. ஏ.முருகேசன் மறைவு செய்தி கேட்டு மிகுந்த துயரம் அடைந்தேன். அவரது பிரிவினால் வாடும் அவரது குடும்பத்துக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்.
சிதம்பர வட்ட மக்களுக்கு பல்வேறு உதவிகளை செய்ய எனக்கு துணையாக இருந்த அவரின் ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன் என தெரிவிக்கப்பட்டுள்ளது.