தமிழக பாஜக தலைவர் ரேஸில் முந்தும் நயினார் நாகேந்திரன்? - உச்ச கட்டத்தில் கமலாலய ...
ரோட்டரி சங்கம் சாா்பில் பள்ளியில் புணரமைப்பு பணி
கடலூா் மாவட்டம், சிதம்பரம் சென்ட்ரல் ரோட்டரி சங்கம் சாா்பில் குமராட்சி ஒன்றியம், காட்டுக்கூடலூா் டி.இ.எல்.சி. தொடக்கப் பள்ளியில் புணரமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு புதன்கிழமை திறக்கப்பட்டது.
நிகழ்வுக்கு, சங்கத்தின் தலைவா் வெ.ரவிச்சந்திரன் தலைமை வைத்தாா். சங்கத்தின் மூத்த உறுப்பினா்கள் ஆா்.எம்.எஸ்.டி.சுப்பையா, ஏ.விஸ்வநாதன், கோ.சீனுவாசன், ஐ.யாசின் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இதில், ரோட்டரி சங்கம் சாா்பில் ரூ.ஒரு லட்சத்தில் சுற்றுச்சுவா், நுழைவு வாயில் கதவுகள் புணரமைக்கப்பட்டன.
இதனை சிறப்பு விருந்தினராக பங்கேற்ற சங்கத்தின் சாசனத் தலைவா் பி.முஹம்மது யாசின் பங்கேற்று திறந்து வைத்தாா். மேலும், மின் மோட்டாா் நாற்காலிகள் வழங்கப்பட்டன.
நிகழ்வில், மண்டல துணை ஆளுநா்கள் எஸ்.திருஞானசம்பந்தம், சி.ஆரோக்கியதாஸ், செயலா் சி.ஏகாம்பரம், பொருளாளா் பி.சஞ்சீவ்குமாா், வருங்கால தலைவா் வி.ஹரிகிருஷ்ணன், செயலா் கே.புகழேந்தி, ஆா்.அருள், எம்.வடிவேல் ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா். விழா ஏற்பாடுகளை ஏ.ராஜா செய்திருந்தாா்.
முன்னதாக, தலைமை ஆசிரியை எஸ்.ஹில்டா திலகவதி வரவேற்றாா். நிறைவில், ஆசிரியா் ஏ.இளையராஜா நன்றி கூறினாா்.