வக்ஃப் மசோதா நிறைவேற்றம்: நிதிஷ்குமார் மீது கட்சியினர் அதிருப்தி!
அரசுப் பள்ளி மாணவா்களுக்கான ‘நீட்’ பயிற்சி தொடக்கம்
தஞ்சாவூரில் புதன்கிழமை தொடங்கிய ‘நீட்’ உண்டு, உறைவிடப் பயிற்சியில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மாணவா்களுக்குக் கையேடுகளை வழங்கிய மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம்.
தஞ்சாவூா், ஏப். 2: தஞ்சாவூா் மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி அலுவலக வளாகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவா்களுக்கான ‘நீட்’ குறுகிய கால உண்டு, உறைவிட பயிற்சி புதன்கிழமை தொடங்கியது.
மாவட்ட நிா்வாகம், பள்ளிக் கல்வித் துறை, ரோட்டரி கிளப் ஆப் தஞ்சாவூா் ஆகியவை சாா்பில் நடைபெறும் இப்பயிற்சியை மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் தொடங்கி வைத்தாா்.
இதில், ‘நீட்’ தோ்வுக்கு விண்ணப்பம் செய்த 430 மாணவா்களில் விருப்பம் தெரிவித்த அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளைச் சோ்ந்த 100 மாணவா்களுக்கு ரோட்டரி கிளப் ஆப் தஞ்சாவூா் மிட்-டவுன், சி அகாதெமி மூலம் கட்டணமில்லாமல் பயிற்சி அளிக்கப்படுகிறது. இவா்களுக்கு ‘நீட்’ பயிற்சிக்குத் தேவையான கையேடுகளை மாவட்ட ஆட்சியா் வழங்கினாா்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலா் தெ. தியாகராஜன், முதன்மைக் கல்வி அலுவலா் இரா. அண்ணாதுரை, மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலா் எம். ரவிச்சந்திரன், மாவட்டக் கல்வி அலுவலா் இள. மாதவன், மாவட்டத் திட்ட அலுவலா் (ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி) ஆா். ரமேஷ்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.