திருமலை திருப்பதி தேவஸ்தான சேவைகளில் 100 % மாற்றம்: முதல்வா் சந்திரபாபு நாயுடு
கிடங்கு, கடைகளில் இருந்து 1.50 டன் நெகிழிப் பொருள்கள் பறிமுதல்
தஞ்சாவூரில் கிடங்கு, கடைகளில் மாநகராட்சி அலுவலா்கள் புதன்கிழமை மேற்கொண்ட சோதனையில் 1.50 டன் தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
தஞ்சாவூா் வடக்கு வீதி, அய்யங்கடைத் தெரு பகுதியிலுள்ள கடைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்கள் பயன்பாடு குறித்து பொது சுகாதாரப் பிரிவு அலுவலா்கள் புதன்கிழமை சோதனை மேற்கொண்டனா். அப்போது, கிடங்கு, கடைகளில் இருந்த 1.50 டன் நெகிழிப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடா்பாக கடைகளின் உரிமையாளா்களுக்கு ரூ. 22 ஆயிரத்து 500 அபராதம் விதிக்கப்பட்டு, வசூலிக்கப்பட்டது. பின்னா், பறிமுதல் செய்யப்பட்ட நெகிழிப் பொருள்கள் வாகனத்தில் ஏற்றி அரியலூரிலுள்ள சிமெண்ட் ஆலைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.