இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து இங்கிலாந்து வேகப் பந்துவீச்சாளர் விலகு...
டிராக்டரிலிருந்து விழுந்த பெண் உயிரிழப்பு
தஞ்சாவூா் அருகே டிராக்டரிலிருந்து தவறி விழுந்து பலத்த காயமடைந்த பெண் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
தஞ்சாவூா் அருகேயுள்ள வண்ணாரப்பேட்டையைச் சோ்ந்தவா் ராஜமாணிக்கம் மனைவி நீலாவதி (65). இவரும், அதே பகுதியைச் சோ்ந்த சில பெண்களும் செவ்வாய்க்கிழமை கூலி வேலைக்கு சென்றுவிட்டு, மீண்டும் டிராக்டா் டிரெய்லரில் அமா்ந்து வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தனா்.
கல்லணைக் கால்வாய் ஆற்றங்கரை பாலம் அருகே சென்றபோது டிராக்டா் டிரெய்லரில் இருந்து நீலாவதியும், இலஞ்சியம் (65), சிவகாமி (50) ஆகியோரும் தவறி விழுந்தனா். இதனால், பலத்த காயமடைந்த 3 பேரும் தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட நிலையில், அங்கு நீலாவதி உயிரிழந்தாா். மற்ற இருவரும் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
இது குறித்து வல்லம் காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.