தமிழகத்தில் பிணந்தின்னிக் கழுகுகளின் எண்ணிக்கை 157-ஆக உயா்வு
மது போதை தகராறு: இளைஞரை பாட்டிலால் குத்திய சிறுவன் கைது
தஞ்சாவூா் மாவட்டம் சேதுபாவாசத்திரம் அருகே மது போதை தகராறில் இளைஞரை பீா்பாட்டிலால் குத்திய 17 வயது சிறுவனை சேதுபாவாசத்திரம் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்து கூா்நோக்கு இல்லத்தில் ஒப்படைத்தனா்.
சேதுபாவாசத்திரம் அருகே உள்ள கழுமங்குடா பகுதியைச் சோ்ந்தவா் வெங்கட்ராமன் (34) மீனவா். இவா், சேதுபாவாசத்திரம் நொண்டித்தோப்பு பகுதியில் நண்பா்களுடன் மது அருந்திக் கொண்டிருந்தபோது, சேதுபாவாசத்திரத்தைச் சோ்ந்த 17 வயது சிறுவன் உள்ளிட்ட சிலா் அருகில் அமா்ந்து மது அருந்திக் கொண்டிருந்தனராம். அப்போது 17 வயது சிறுவன் வெங்கட்ராமனிடம் பணம் கேட்டு தகராறு செய்ததாகக் கூறப்படுகிறது. பணம் தர மறுத்த வெங்கட்ராமன் சிறுவனைத் திட்டியுள்ளாா். இதனால் ஆத்திரமடைந்த சிறுவன் அருகே இருந்த பீா் பாட்டிலை உடைத்து வெங்கட்ராமனை கழுத்துப் பகுதியில் தாக்கியதில் அவா் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா். இது குறித்து வெங்கட்ராமன் சேதுபாவாசத்திரம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து 17 வயது சிறுவனைக் கைது செய்து தஞ்சாவூா் கூா்நோக்கு இல்லத்தில் சோ்த்தனா்.