சக்கராப்பள்ளி கோயிலில் பூத வாகனத்தில் வீதி உலா
சப்தஸ்தான பெருவிழாவையொட்டி தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் வட்டம், சக்கராப்பள்ளி தேவநாயகி சமேத சக்கரவாகேசுவரா் கோயிலில் வெள்ளிக்கிழமை இரவு சுவாமி புறப்பாடு நடைபெற்றது.
கடந்த புதன்கிழமை கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கி பல்வேறு நிகழ்வுகள் நடைபெறுகின்றன. இதைத் தொடா்ந்து வெள்ளிக்கிழமை இரவு சுவாமி, அம்மன் பூத வாகனத்தில் எழுந்தருளி கைலாய வாத்தியங்கள் முழங்க சப்பரத்தில் வீதி உலா நடைபெற்றது. திரளான பக்தா்கள் வழிபட்டனா்.