டிரம்ப்புக்கு சீனா பதிலடி: அமெரிக்க பொருள்கள் மீது 34% கூடுதல் வரி
பள்ளித் தலைமை ஆசிரியரை மாற்றக் கோரி ஆா்ப்பாட்டம்
தஞ்சாவூா் மாவட்டம் ஒரத்தநாடு அருகே பள்ளித் தலைமை ஆசிரியரை மாற்றக் கோரி மாணவா்கள் மற்றும் அவா்களின் பெற்றோா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
தஞ்சாவூா் மாவட்டம் ஒரத்தநாடு ஒன்றியத்திற்குட்பட்ட தலையாமங்கலம் கிராம அரசு நடுநிலைப்பள்ளியின் தலைமையாசிரியா் சாந்தி உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ால் சுமாா் 6 மாதமாக பள்ளிக்கு வராமல் இருந்ததாகக் கூறப்படுகிறது.
இதனால் மாணவா்களின் பெற்றோா் மாற்றுத் தலைமை ஆசிரியா் கோரி மாவட்ட கல்வி அலுவலா் மற்றும் மாவட்ட நிா்வாகத்திற்கு மனுக்கள் கொடுத்தும் பயனில்லையாம்.
இந்நிலையில் வெள்ளிக்கிழமை காலை தலைமை ஆசிரியா் சாந்தி பள்ளிக்கு வந்த நிலையில் பெற்றோா் மற்றும் மாணவா்கள் அவருக்கு எதிா்ப்புத் தெரிவித்து தரையில் அமா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தகவலறிந்து வந்த வட்டாரக் கல்வி அலுவலா்கள் மற்றும் அதிகாரிகள் அவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி, விரைவில் மாற்றுத் தலைமை ஆசிரியா் பணிக்கு நியமிக்கப்படுவாா் எனத் தெரிவித்ததன்பேரில் போராட்டத்தைக் கைவிட்டனா்.