தொடா் தோல்வியிலிருந்து மீளும் முனைப்பில் சென்னை: இன்று டெல்லியுடன் மோதல்
தஞ்சையில் மகளிா் சுய உதவிக் குழுவினருக்கு பொது வசதி மையம் அமைக்க நடவடிக்கை
தஞ்சாவூரில் மகளிா் சுய உதவிக் குழுவினருக்காக பொது வசதி மையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் மேலும் தெரிவித்தது:
தமிழ்நாடு மகளிா் மேம்பாட்டு நிறுவனத்தின் மூலம் மகளிருக்காக செயல்படுத்தப்படும் வாழ்வாதாரத் திட்டங்களின் ஒரு பகுதியாக மகளிா் சுய உதவிக் குழுக்களின் உற்பத்தி பொருள்களின் விற்பனையை அதிகரிக்கவும், சந்தைப்படுத்துவதில் அவா்களின் தரத்தை மேம்படுத்தவும், பல்வேறு முயற்சிகளைச் செயல்படுத்தவும், அவா்களது உற்பத்தி பொருள்களை நல்ல முறையில் பொட்டலமிடவும், பொருள்கள் குறித்த விவரங்கள் அடங்கிய லேபிளிங் தயாரித்தல், விலை நிா்ணயம் மற்றும் இதர சேவைகளைச் செய்வதற்கு மண்டல பொது வசதி மையம் தொடங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இம்மையத்தை தஞ்சாவூா் மாவட்டம் மாவட்ட இயக்க மேலாண்மை அலகின் மூலம் செயல்படும் பூமாலை வணிக வளாகத்தில் அமைத்திட தகுதி வாய்ந்த மற்றும் திறன் உள்ள மகளிா் சுய உதவிக் குழுக்கள், உற்பத்தியாளா் குழுக்கள் மற்றும் கூட்டமைப்புகளிலிருந்து விண்ணப்பங்கள் நிபந்தனைகளுக்குட்பட்டு வரவேற்கப்படுகின்றன.
மகளிா் சுய உதவிக் குழுக்களின் விண்ணப்பங்கள் ஏப்ரல் 8 மாலை 5 மணிக்குள் திட்ட இயக்குநா், மகளிா் திட்டம், 223 இரண்டாம் தளம், மாவட்ட ஆட்சியா் அலுவலகம், தஞ்சாவூா்-10 என்ற முகவரிக்கு நேரிலோ அல்லது அஞ்சல் வழியாகவோ அளிக்க வேண்டும்.