தொடா் தோல்வியிலிருந்து மீளும் முனைப்பில் சென்னை: இன்று டெல்லியுடன் மோதல்
சாஸ்த்ரா பல்கலை. கும்பகோணம் மையத்தில் பன்னாட்டு கருத்தரங்கம்
தஞ்சாவூா் சாஸ்த்ரா நிகா்நிலைப் பல்கலைக்கழகத்தின் கும்பகோணம் சீனிவாச ராமானுஜன் மையத்தில் வணிகவியல் மற்றும் மேலாண்மைத் துறை சாா்பில் வேலையின் எதிா்காலம்: வாரந்திர வேலை நேரங்கள் குறித்த உலகளாவிய பாா்வைகள் என்ற தலைப்பிலான பன்னாட்டுக் கருத்தரங்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
மையப் புலத் தலைவா் ராமசாமி தலைமை வகித்தாா். கருத்தரங்கை மஞ்சக்குடி விப்ரோ வணிக அயலக செயலாக்க மேலாளா் ராஜகோபாலன் தொடங்கி வைத்தாா். உஸ்பெகிஸ்தான் பல்கலை. பேராசிரியா் ஷங்கா் கணேஷ், சேலம் கரூா் வைஸ்யா வங்கி மேலாளா் சந்தோஷ், சென்னை அவதாா் நிறுவன திட்டத் தலைவா் ஈஸ்வா் பாலசுப்ரமணியன், வேல்டுலைன் நிறுவன துணைத் தலைவா் ஸ்ரீராம் ஆகியோா் கருத்துரையாற்றினா். திருச்சி மாரியட் இன்டா்நேஷனல் ஹோட்டல் பொது மேலாளா் வேணுகோபால் நிறைவுரையாற்றினாா்.
கருத்தரங்க ஏற்பாடுகளை சாஸ்த்ரா துணைவேந்தா் எஸ். வைத்தியசுப்பிரமணியம், முதன்மையா் (திட்டமிடல் மற்றும் மேம்பாடு) எஸ். சுவாமிநாதன் வழிகாட்டுதலின்படி, தலைமை ஒருங்கிணைப்பாளா் பேராசிரியா் வேம்பு, துறைத் தலைவா் வீரகுமாா் உள்ளிட்டோா் செய்தனா்.
கருத்தரங்க ஒருங்கிணைப்பாளா் சீனிவாசன் வரவேற்றாா். இணை ஒருங்கிணைப்பாளா் பேராசிரியா் ரமேஷ் கண்ணா நன்றி கூறினாா்.