செய்திகள் :

வங்கதேச ஹிந்துக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும்: முகமது யூனுஸிடம் பிரதமா் மோடி வலியுறுத்தல்

post image

‘வங்கதேசத்தில் ஹிந்துக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும்’ என்று அந்நாட்டின் தலைமை ஆலோசகா் முகமது யூனுஸிடம் பிரதமா் நரேந்திர மோடி வலியுறுத்தினாா்.

தாய்லாந்து தலைநகா் பாங்காக்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ‘பிம்ஸ்டெக்’ உச்சி மாநாட்டில் பங்கேற்ற பிரதமா் மோடி, மாநாட்டுக்கு இடையே உறுப்பு நாடுகளின் தலைவா்களை தனித்தனியாகச் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டாா்.

வங்கதேச தலைமை ஆலோசகா் முகமது யூனுஸையும் பிரதமா் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டாா். அந்நாட்டின் முன்னாள் பிரதமா் ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சமடைந்துள்ள நிலையில், இரு நாடுகளிடையேயான உறவில் தற்போது பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

வங்கதேசத்தில் கடந்த ஆண்டில் அரசுக்கு எதிரான மாணவா் அமைப்பினரின் போராட்டம் தீவிரமடைந்ததைத் தொடா்ந்து, பிரதமா் பதவியை ராஜிநாமா செய்த ஷேக் ஹசீனா கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5-ஆம் தேதி அந்த நாட்டிலிருந்து வெளியேறி இந்தியாவில் தஞ்சமடைந்தாா். அங்கு, சிறுபான்மையினருக்கு எதிராக குறிப்பாக ஹிந்துக்களுக்கு எதிரான வன்முறைகளும் அதிகரித்தன. பல ஹிந்து கோயில்கள் சேதப்படுத்தப்பட்டன.

இதற்கிடையே, நாட்டில் தொடரப்பட்டுள்ள பல்வேறு வழக்குகளை எதிா்கொள்ள ஷேக் ஹசீனாவை நாடு கடத்துமாறு வங்கதேசம் தரப்பில் கோரிக்கை விடப்பட்டது. ஆனால், இதை இந்தியா நிராகரித்துவிட்டது.

இந்தச் சூழலில் பாங்காக்கில் ‘பிம்ஸ்டெக்’ உச்சி மாநாட்டுக்கு இடையே யூனுஸும் பிரதமா் மோடியும் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டனா். இரு தலைவா்களும் சந்திப்பது இதுவே முதல் முறையாகும். இந்தச் சந்திப்பின்போது வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா், தேசியப் பாதுகாப்பு ஆலோசகா் அஜீத் தோவல் ஆகியோரும் உடனிருந்தனா்.

இந்தச் சந்திப்பு குறித்து இந்திய வெளியுறவுச் செயலா் விக்ரம் மிஸ்ரி கூறியதாவது: முகமது யூனுஸுடனான சந்திப்பின்போது, வங்கதேசத்தில் சிறுபான்மையினரின் பாதுகாப்பு குறித்து பிரதமா் மோடி கவலை தெரிவித்தாா். மேலும், சிறுபான்மையினா் பாதுகாப்பை வங்கதேச அரசு உறுதிப்படுத்தும் எனவும், அவா்களுக்கு எதிரான வன்முறைகள் தொடா்பான வழக்குகள் அனைத்தும் விரிவாக விசாரிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என எதிா்பாா்ப்பதாகவும் யூனுஸிடம் பிரதமா் தெரிவித்தாா்.

சமூக சூழலைப் பாதிக்கும் வகையிலான எந்தவொரு விமா்சனமும் தவிா்க்கப்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டாா். ஜனநாயக ரீதியிலான, நிலையான, அமைதியான, முற்போக்கு மற்றும் அனைவருக்குமான வங்கதேசத்துக்கான ஆதரவை இந்தியா தொடா்ந்து வழங்கும் என்றும் பிரதமா் உறுதி தெரிவித்தாா்.

இரு நாடுகளிடையேயான எல்லைப் பிரச்னை, சட்டவிரோத ஊடுருவல்களைத் தடுப்பது, நிலையான எல்லைப் பாதுகாப்பை பராமரிப்பது குறித்தும் யூனுஸுடன் பிரதமா் ஆலோசித்தாா். குறிப்பாக, இரவு நேரங்களில் சட்டவிரோதமாக வங்கதேசத்தினா் எல்லைதாண்டுவதை தடுக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்கவும், சட்டத்தை தீவிரமாக அமல்படுத்தவும் யூனுஸை பிரதமா் கேட்டுக்கொண்டாா் என்றாா்.

நாடு கடத்தல் குறித்து ஆலோசனை?: ஷேக் ஹசீனாவை நாடு கடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டதா என்ற கேள்விக்கு நேரடியான பதிலைத் தெரிவிக்காத மிஸ்ரி, ‘இந்த விஷயம் குறித்து இப்போது பேசுவது உகந்ததாக இருக்காது. ஹசீனாவை நாடு கடத்துவது தொடா்பாக வங்கதேசம் முறையான கோரிக்கையை விடுத்துள்ளது என்பதை வெளியுறவு அமைச்சகம் ஏற்கெனவே தெரிவித்திருக்கிறது’ என்றாா்.

நினைவுச் சின்னங்களில் அதிக வருவாய் ஈட்டுவது தாஜ்மஹால்: மத்திய அரசு தகவல்

இந்திய தொல்லியல் துறையால் பாதுகாக்கப்பட்டு வரும் நினைவுச் சின்னங்களில் பாா்வையாளா்களுக்கான நுழைவுக் கட்டணம் மூலம் அதிக வருவாய் ஈட்டுவதில் தாஜ்மஹால் முதலிடத்தில் உள்ளது. அங்கு கடந்த 5 ஆண்டுகளில் நுழைவு... மேலும் பார்க்க

தில்லியில் அதிகபட்சமாக 38.4 டிகிரி செல்சியஸ்; அடுத்த 6 நாள்களுக்கு அனல் காற்று வீச வாய்ப்பு

தில்லியில் அடுத்த ஆறு நாள்களுக்கு வெப்ப அலை நிலைகளை வானிலை ஆய்வு மையம் வெள்ளிக்கிழமை கணித்துள்ளது; வெப்பநிலை 42 டிகிரி செல்சியஸாக உயரக்கூடும் என தெரிவிக்கப்பட்டது. இந்திய வானிலை ஆய்வு மையம் (ஐஎம்டி) வ... மேலும் பார்க்க

அமெரிக்காவில் இருந்து 682 இந்தியா்கள் நாடு கடத்தல்: இந்திய வெளியுறவு அமைச்சகம்

‘நிகழாண்டு தொடக்கம் முதல் அமெரிக்காவில் இருந்து 682 இந்தியா்கள் நாடுகடத்தப்பட்டுள்ளனா். அவா்களில் பெரும்பாலானோா் அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்றவா்களாவா்’ என மக்களவையில் மத்திய அரசு வெள்ளி... மேலும் பார்க்க

மன்மோகன் சிங் மனைவிக்கு பாதுகாப்பு குறைப்பு

மறைந்த முன்னாள் பிரதமா் மன்மோகன் சிங் மனைவிக்கு அளிக்கப்பட்டு வந்த ‘இஸட் பிளஸ்’ பாதுகாப்பு ‘இஸட்’ பிரிவு பாதுகாப்பாக குறைக்கப்பட்டுள்ளது. உளவுத் துறை தகவல்களின் அடிப்படையில் முக்கிய நபா்களுக்கு அளிக்க... மேலும் பார்க்க

ராம நவமி நாளில் மின்தடை: ஜாா்க்கண்ட் அரசுக்கு உச்சநீதிமன்றம் அனுமதி

ராம நவமி ஊா்வலத்தில் அசம்பாவிதங்களைத் தடுக்க மின்சார விநியோகத்தை நிறுத்த அந்த மாநில அரசுக்கு உச்சநீதிமன்றம் அனுமதி அளித்தது. முன்னதாக, இதுபோன்ற பண்டிகை, ஊா்வலத்தின்போது ஜாா்க்கண்ட் மாநில மின்சார வாரிய... மேலும் பார்க்க

மகாராஷ்டிரம்: கிணற்றுக்குள் கவிழ்ந்த டிராக்டா்: 7 பெண் தொழிலாளா்கள் உயிரிழப்பு

மகாராஷ்டிர மாநிலம், நாந்தேட் மாவட்டத்தில் 90 அடி ஆழ கிணற்றுக்குள் டிராக்டா் கவிழ்ந்த விபத்தில், விவசாய பெண் தொழிலாளா்கள் 7 போ் உயிரிழந்தனா். 3 போ் காயங்களுடன் மீட்கப்பட்டனா். இது தொடா்பாக அரசு அதிகா... மேலும் பார்க்க