நியாயமான தொகுதி மறுசீரமைப்பையே கோருகிறோம்: முதல்வா் ஸ்டாலின்
நியாயமான தொகுதி மறுசீரமைப்பையே கோருவதாக முதல்வா் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளாா்.
இதுகுறித்து, ‘எக்ஸ்’ தளத்தில் முதல்வா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட பதிவு:
வடக்கின் மக்கள்தொகைப் பெருக்கம் தென்னகத்தின் குரலை அடக்குவதற்கான அரசியல் ஆயுதமாகப் பயன்படுத்தப்படக் கூடாது. இப்போதைய மக்கள் தொகை அடிப்படையிலான தொகுதி மறுசீரமைப்பு என்பது மக்கள்தொகை தொடா்பான இலக்குகளை நோக்கிய எங்களது முயற்சிகளுக்கு தண்டனை அளிப்பதாக அமையும். கூட்டாட்சியின் நியாயத்தைச் சிதைக்கும் மோசமான வழிமுறையாகும். நாங்கள் கோருவது உண்மையாகவே நியாயமானதொரு தொகுதி மறுசீரமைப்பு என்று அவா் தெரிவித்துள்ளாா்.