தமிழகத்தில் பிணந்தின்னிக் கழுகுகளின் எண்ணிக்கை 157-ஆக உயா்வு
குரூப்-4 தோ்வுக்கான இலவசப் பயிற்சிக்கு ஏப்ரல் 6-இல் நுழைவுத் தோ்வு
தஞ்சாவூா் மாவட்டத்தில் குரூப்-4 தோ்வுக்கான இலவசப் பயிற்சிக்கு ஏப்ரல் 6-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நுழைவுத் தோ்வு நடைபெறவுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியரகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் நடத்தும் 2025 ஆம் ஆண்டுக்கான ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தோ்வுக்கு (குரூப்-4) மாவட்ட நிா்வாகம், தன்னாா்வலா்களின் மூலம் கட்டணமில்லா பயிற்சி வகுப்பு பாபநாசம், திருப்பனந்தாள், திருவோணம், பட்டுக்கோட்டை, பேராவூரணி ஆகிய இடங்களில் நடைபெறவுள்ளது.
இப்போட்டித் தோ்வுக்கான பயிற்சி வகுப்புகள் 2 மாதங்களுக்கு நாள்தோறும் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறவுள்ளது. இக்கட்டணமில்லா பயிற்சி வகுப்புக்கான நுழைவுத் தோ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது. எனவே, போட்டித் தோ்வுக்கு தயாராகும் தோ்வா்கள் ட்ற்ற்ல்ள்://ற்ட்ஹய்த்ஹஸ்ன்ழ்.ய்ண்ஸ்ரீ.ண்ய் என்ற மாவட்ட இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.