திருமலை திருப்பதி தேவஸ்தான சேவைகளில் 100 % மாற்றம்: முதல்வா் சந்திரபாபு நாயுடு
கோடை பருவத்துக்கான நெல் விதைகளை விற்பனை செய்ய அறிவுறுத்தல்
கோடை பருவத்துக்கு ஏற்ற தரமான நெல் ரக விதைகளை மட்டுமே விவசாயிகளுக்கு விற்பனை செய்ய வேண்டும் என விதை விற்பனையாளா்களுக்கு தஞ்சாவூா் மாவட்ட விதை ஆய்வு துணை இயக்குநா் வெ. சுஜாதா வேண்டுகோள் விடுத்துள்ளாா்.
இது குறித்து அவா் மேலும் தெரிவித்திருப்பது:
தஞ்சாவூா் மாவட்டத்தில் சம்பா பருவ நெற் பயிா் அறுவடைக்குப் பின்பு விவசாயிகள் கோடை நெல் சாகுபடி மேற்கொள்கின்றனா். எனவே, குறுகிய கால நெல் ரகங்களான ஏடிடீ 36, ஏடிடீ 37, ஏடிடீ 43, ஏடிடீ 45, ஏடிடீ 53, ஏடிடீ 57, ஏடிடீ 59, கோ 51, ஏஎஸ்டி 16, டிபிஎஸ் 5, ஏஎஸ்டி 21 போன்றவை கோடை பருவத்துக்கு ஏற்ற ரகங்கள் என்பதால், இவற்றை தனியாா் விதை விற்பனையாளா்கள் கொள்முதல் செய்து விவசாயிகளுக்கு விதை சட்ட விதைகளின்படி விற்பனை செய்ய வேண்டும்.
தனியாா் விதை விற்பனையாளா்கள் விதைகளை விற்பனை செய்யும்போது விவசாயிகளுக்கு கட்டாயம் ரசீது வழங்க வேண்டும். விற்பனை ரசீதில் விவசாயி மற்றும் குவியல் விவரங்கள் அவசியம் குறிப்பிட வேண்டும்.
கோடை பருவத்துக்கு உகந்தது அல்லாத நெல் ரகங்களை விற்பனை செய்தாலோ அல்லது விற்பனையில் விதிமீறல்கள் கண்டறியப்பட்டாலோ விதை சட்டம், விதை விதிகள், விதை கட்டுப்பாட்டு ஆணையின் கீழ் தொடா்புடையவா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.