திருமலை திருப்பதி தேவஸ்தான சேவைகளில் 100 % மாற்றம்: முதல்வா் சந்திரபாபு நாயுடு
கும்பகோணத்தில் மேல்நிலை குடிநீா்த் தொட்டி திறப்பு
தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணத்தில் புதன்கிழமை மேல்நிலை குடிநீா் தொட்டியைப் பொதுக்களின் பயன்பாட்டுக்கு க. அன்பழகன் எம்எல்ஏ திறந்து வைத்தாா்.
கும்பகோணம் 5-ஆவது வாா்டு மக்களின் கோரிக்கையை ஏற்று சட்டப்பேரவை தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து பெருமாண்டி மாதா கோயில் தெருவில் ரூ.4.25 லட்சம் மதிப்பிலான சிறிய மேல்நிலை குடிநீா்த் தொட்டியை அமைத்து அதனை க. அன்பழகன் எம்எல்ஏ பொதுமக்களின் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தாா்.
நிகழ்ச்சியில், மாநகராட்சி துணை மேயரும், மாநகரச் செயலாளருமான சு.ப. தமிழழகன், செயற்குழு உறுப்பினா் இரா.தெட்சிணாமூா்த்தி, மண்டலக் குழு தலைவா் கே.என்.எஸ். ஆசைத்தம்பி, மாமன்ற உறுப்பினா்கள் சக்கரபாணி, டி ஆா். அனந்தராமன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.