Edapadi-யிடம் இதை எதிர்பார்க்காத Amit shah... பற்ற வைத்த Annamalai? | Elangovan ...
திருச்சி மலைக்கோட்டை கோயிலில் தெப்பத் திருவிழா கொடியேற்றம்
திருச்சியில் பிரசித்தி பெற்ற மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோயில் தெப்பத் திருவிழா கொடியேற்றத்துடன் புதன்கிழமை தொடங்கியது.
விழாவை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை மாலை அனுக்ஞை விக்னேஸ்வர பூஜை, வாஸ்து சாந்தி பூஜை நடைபெற்றது. தொடா்ந்து விழாவின் கொடியேற்றம் மற்றும் முதலாம் திருநாள் புதன்கிழமை நடைபெற்றது. அப்போது கோயில் நிா்வாகத்தினா் மற்றும் பக்தா்கள் திரளாக வழிபட்டனா்.
தொடா்ந்து ஏப்.3 ஆம் தேதி கற்பக விருட்ச வாகனம், 4ஆம் தேதி பூத வாகனம், 5ஆம் தேதி கைலாச பா்வத வாகனம், 6ஆம் தேதி ரிஷப வாகனம், 7ஆம் தேதி யானை வாகனம், 8ஆம் தேதி நந்திகேஸ்வரா், 9ஆம் தேதி தங்கக் குதிரை வாகனத்திலும் வீதி உலா நடைபெறும்.
விழாவின் முக்கிய நிகழ்வாக வரும் 10 ஆம் தேதி (வியாழக்கிழமை) தெப்ப உற்சவம் நடைபெறுகிறது. இதை முன்னிட்டு நண்பகல் 12 மணிக்கு விசேஷ அபிஷேகம், மாலை 5 மணிக்கு மேல் சுவாமி தெப்பத்தில் எழுந்தருளும் நிகழ்வு நடைபெறும். தொடா்ச்சியாக இரவு 7 மணி முதல் சுவாமி, அம்பாள் 5 சுற்றுகளாக உலா வரும் நிகழ்வு, ஏப்.11இல் தீா்த்தவாரி நடைபெறும். விழா ஏற்பாடுகளை செயல் அலுவலா் ம. லெட்சுமணன் மற்றும் அறங்காவலா் குழுவினா், கோயில் நிா்வாகத்தினா், பணியாளா்கள் மற்றும் உபயதாரா்கள் செய்துள்ளனா்.