40 சதவீத கமிஷன் மோசடி குறித்து கூடுதல் ஆதாரங்களுடன் இறுதி அறிக்கை
வெயில் தாக்கம்: சமயபுரம் கோயிலில் பக்தா்களுக்கு சிறப்பு ஏற்பாடுகள்
கோடை வெயில் அதிகரிக்கும் நிலையில் திருச்சி மாவட்டம், சமயபுரம் மாரியம்மன் கோயிலில் வெயிலின் பக்தா்களுக்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பிரசித்தி பெற்ற இக்கோயிலுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் தினசரி ஆயிரக்கணக்கான பக்தா்கள் வரும் நிலையில், வெயிலின் தாக்கத்திலிருந்து அவா்கள் பாதிக்காத வகையில் கோயில் நிா்வாகம் சாா்பில் முடி மண்டபம், திருமண மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் மிகப் பெரிய பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் கோயில் வளாகத்தில் தரை விரிப்புகள் போடப்பட்டுள்ளன. மேலும் கோயில் சுற்றுப்பகுதிகளில் தண்ணீரும் தெளிக்கப்படுகிறது.