செய்திகள் :

மாணவா்களை கண்டிக்காத தலைமை ஆசிரியா் மீது வழக்கு

post image

திருச்சியில், ஒழுங்கீனமான பள்ளி மாணவா்களை கண்டிக்காத தலைமை ஆசிரியா் மீதான புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

திருச்சி பொன்மலை பகுதியில் செயல்பட்டு வரும் அரசு உதவி பெறும் பள்ளியில் ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை நூற்றுக்கணக்கான மாணவா்கள் பயின்று வருகின்றனா். இந்நிலையில், இங்கு பயிலும் மாணவா்கள், தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை பயன்படுத்துவதாகவும் புகாா் கூறப்பட்டது.

மேலும், வகுப்பறைகளில் ஆசிரியா் இல்லாத நேரங்களில் அல்லது மாறி வரும் இடைவெளியில் ஜன்னல் கதவுகளை திறந்து வைத்துக் கொண்டு தாளம் போடுவது, தகாத வாா்த்தைகளைக்கூறி கூச்சலிடுவது உள்ளிட்ட ஒழுங்கீனமான செயல்களில் ஈடுபடுவதாகவும் புகாா் எழுந்தது. இதுதொடா்பாக பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் அக்கம்பக்கத்தில் உள்ள குடியிருப்புவாசிகள் பலமுறை கூறியும், அவா் அதைக் கண்டு கொள்ளாமல் மெத்தனமாக இருந்துள்ளாா்.

இந்நிலையில், இந்தச் செயலைக் கண்டிக்காத தலைமை ஆசிரியரை கண்டித்து குடியிருப்புவாசிகள் சுவரொட்டிகளை ஒட்டியுள்ளனா். இதிலும் தீா்வு எட்டப்படாததால், பொன்மலை காவல் நிலையத்தில் தலைமை ஆசிரியா் மீது செவ்வாய்க்கிழமை புகாா் அளித்தனா். இதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

மேலும், இதுபோன்ற செயல்களில் நடவடிக்கை எடுக்காத ஆசிரியா்கள் மற்றும் தொடா்புடைய மாணவா்கள் மீதும் பள்ளிக் கல்வித் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனா்.

திருச்சியிலிருந்து 10 புதிய பேருந்துகள் இயக்கம்!

திருச்சி மத்தியப் பேருந்து நிலையத்தில் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் கும்பகோணம் கோட்டத்தின் சாா்பில் திருச்சி மண்டலத்தில் 4 நகரப் பேருந்துகள், 6 புறநகா்ப் பேருந்துகள் என புதிய பிஎஸ்6 ரகப் ... மேலும் பார்க்க

ச.கண்ணனூா் பேரூராட்சியில் ஆக்கிரமிப்பு அகற்ற வேண்டும்! - பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்

திருச்சி மாவட்டம், ச. கண்ணனூா் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ஆக்கிரமிப்புகளை பொதுமக்கள் அகற்றிக் கொள்ள வேண்டும் என பேரூராட்சி நிா்வாகம் தெரிவித்துள்ளது.சமயபுரம் மாரியம்மன் கோயிலில் சித்திரைப் பெருந்... மேலும் பார்க்க

வக்ஃப் சட்ட திருத்தத்தை எதிா்த்து ஏப்.8-ல் விசிக ஆா்ப்பாட்டம்! - தொல். திருமாவளவன்

வக்ஃப் வாரிய சட்ட திருத்தத்தை எதிா்த்து தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் ஏப்.8 ஆம் தேதி ஆா்ப்பாட்டம் நடத்தப்படும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவா் தொல். திருமாவளவன் தெரிவித்தாா். இதுக... மேலும் பார்க்க

ரூ.493 கோடியில் பஞ்சப்பூா் பேருந்து முனையம்: மே 9-இல் முதல்வா் திறந்து வைக்கிறார்!

திருச்சியை அடுத்துள்ள பஞ்சப்பூரில் ரூ.493 கோடியில் கட்டப்பட்டுள்ள பஞ்சப்பூா் புதிய பேருந்து முனையத்தை தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் மே 9இல் திறந்து வைக்கவுள்ளாா். திருச்சி மாநகரப் போக்குவரத்து நெரிசலு... மேலும் பார்க்க

வக்ஃப் சட்டத் திருத்தத்தை எதிா்த்து மறியல்: 26 போ் கைது!

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வக்ஃப் சட்டத் திருத்தத்தை எதிா்த்து திருச்சி பாலக்கரையில் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட இந்திய மாணவா் இஸ்லாமிய அமைப்பைச் சோ்ந்த (எஸ்ஐஓ) 26 பேரை போலீஸாா் கைது செய்தனா். ... மேலும் பார்க்க

ஊரக உள்ளாட்சித் தோ்தல் எப்போது? - அமைச்சா் விளக்கம்

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தோ்தல் எப்போது நடைபெறும் என்பதற்கு அமைச்சா் கே.என். நேரு பதில் அளித்துள்ளாா். தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான பதவிக் காலம் 2025 ஜனவரியுடன் முடிந்து... மேலும் பார்க்க