ஒரு சென்ட் நிலம்கூட கிடையாது; கட்சி கட்டடமே வசிப்பிடம் - சிபிஎம் தேசிய பொதுச் செ...
ஆண்டனியின் வருகையால் தோல்வியை சந்திக்காத ரியல் பெட்டிஸ்: பார்சிலோனா முதலிடத்தில் நீடிப்பு!
லா லீகா கால்பந்து தொடரில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பார்சிலோனா, ரியல் பெட்டிஸ் ஆட்டம் 1-1 என சமனில் முடிந்தது.
இந்தப் போட்டியில் 7ஆவது நிமிஷத்தில் பார்சிலோனாவின் கவி கோல் அடித்து அசத்தினார்.
ரியல் பெட்டிஸ் சார்பாக 17ஆவது நிமிஷமாக நாடன் கோல் அடித்தார்.
இந்தப் போட்டியில் 75 சதவிகிதம் பந்தினை பார்சிலோனா அணியே தக்க வைத்திருந்தது.
வாய்ப்புகளை தவறவிட்ட பார்சிலோனா
9 கார்னர் வாய்ப்புகள், 5 முறை இலக்கை நோக்கி பந்தினை அடித்தும் பார்சிலோனா அணியினால் அதை கோலாக மாற்ற முடியவில்லை.
30 போட்டிகளில் விளையாடியுள்ள பார்சிலோனா 67 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறது.
ரியல் மாட்ரிட் தோல்வியுற்றதால் பார்சிலோனா அணி வென்றிருந்தால் கூடுதல் ஆதாயமாக இருந்திருக்கும்.
மொத்தம் 38 போட்டிகள் கொண்ட இந்த லா லீகா கால்பந்து தொடரில் அதிக புள்ளிகள் பெறும் அணி வெற்றிபெற்ற அணியாக அறிவிக்கப்படும்.
ஆண்டனி வருகையால் அசத்தும் ரியல் பெட்டிஸ்
ரியல் பெட்டிஸ் அணியின் பிரேசில் கால்பந்து வீரர் ஆண்டனி சான்டோஷ் மான்செஸ்டர் யுனைடெட் அணியில் இருந்து லோன் மூலமாக வாங்கப்பட்டர்.
ஆண்டனி வருகைக்குப் பின்னர் ஒரே போட்டியில் மட்டுமே தோல்வியுற்று இருக்கும் ரியல் பெட்டிஸ் தொடர்ச்சியாக வெற்றி பெற்று வருகிறது.
சமீபத்தில் நடப்பு சாம்பியன் ரியல் மாட்ரிட்டை வீழ்த்தியது. நேற்று நள்ளிரவு இந்திட நேரப்படி 2 மணிக்கு நடைபெற்ற போட்டியில் பார்சிலோனாவுடன் சமன் செய்தது.
ரியல் பெடிஸ் அணியின் வீரர் இஸ்கோ ஆண்டனியை தக்கவைக்க மக்களிடம் நன்கொடை வசூலிக்க வேண்டுமெனக் கூறியதும் குறிப்பிடத்தக்கது
லா லீகா புள்ளிப் பட்டியல்
1. பார்சிலோனா - 30 போட்டிகள் - 67 புள்ளிகள்
2. ரியல் மாட்ரிட் - 30 போட்டிகள் - 63 புள்ளிகள்
3. அத்லெடிகோ மாட்ரிட் - 29 போட்டிகள் - 57 புள்ளிகள்
4. அத்லெடிக் கிளப் - 29 போட்டிகள் - 53 புள்ளிகள்
5. ரியல் பெட்டிஸ் - 30 போட்டிகள் - 48 புள்ளிகள்
6. வில்லாரியல் - 28 போட்டிகள் - 47 புள்ளிகள்