செய்திகள் :

பிரதமர் விழாவில் பங்கேற்காதது ஏன்? முதல்வர் விளக்கம்!

post image

பிரதமர் நரேந்திர மோடியின் பாம்பன் பால திறப்பு விழாவில் பங்கேற்காதது குறித்து முதல்வர் ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.

உதகையில் ரூ.727 கோடியில் புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற திட்டப்பணிகளை முதல்வர் ஸ்டாலின் இன்று(ஏப். 6) தொடக்கி வைத்தார். பின்னர், பொதுமக்களுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கி உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:

”உதகை விழாவில் பங்கேற்பதால் பாம்பன் புதிய ரயில் பால திறப்பு விழாவிற்கு செல்ல முடியவில்லை. இதை முன்னதாகவே பிரதமரிடம் தெரிவித்துவிட்டேன். இவ்விழாவுக்கு அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, ராஜகண்ணப்பன் ஆகியோர் சென்றுள்ளனர்.

பட்டினிச்சாவே இல்லாத மாநிலமாக தமிழ்நாட்டை மாற்றி இருக்கிறோம். இந்தியாவில் மற்ற மாநிலங்களைவிட தமிழ்நாடு மட்டும் அசுர வேகத்தில் வளர்ந்து வருகிறது. உயர்கல்வி சேர்க்கை விகிதத்தில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. பொருளாதார வளர்ச்சியில் டாப் கியரில் தமிழ்நாடு சென்றுகொண்டிருக்கிறது.

நீலகிரி மாவட்டத்துக்கு 6 முக்கிய அறிவிப்புகளை வெளியிடுகிறேன்.

* நீலகிரியில் சொந்தமாக வீடு இல்லாத ஏழைகளுக்கு ரூ. 26 கோடியில் 300 வீடுகள் கொண்ட கலைஞர் நகர் உருவாக்கப்படும்.

* ரூ. 10 கோடியில் பழங்குடியினர் அருங்காட்சியகம் மற்றும் ஆராய்ச்சி நிலையம் அமைக்கப்படும்.

* நீலகிரி மாவட்டத்தில் உள்ள இயற்கை அழகைக் கண்டு களிக்கும் வகையில் ஏறி இறங்கும் சுற்றுலா முறை அறிமுகம் செய்யப்படும்.

* நீலகிரி மாவட்டத்தில் நகர்ப்புறங்களில் வாழும் பழங்குடியினருக்கு ரூ. 10 கோடியில் 200 வீடுகள் கட்டித் தரப்படும்.

* ரூ. 20 கோடியில் பன்னடுக்கு கார் நிறுத்துமிடம் அமைக்கப்படும்.

* பழங்குடின மக்களுக்கு 23 சமுதாயக் கூடங்கள் கட்டித் தரப்படும்” என்றார்.

இதையும் படிக்க: உதகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை: முதல்வர் திறந்துவைத்தார்!

தொடர்ந்து குறையும் தங்கம் விலை: இன்றைய நிலவரம்!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(ஏப். 7) சவரனுக்கு ரூ. 200 குறைந்துள்ளது.தங்கத்தின் விலை சனிக்கிழமை சவரனுக்கு ரூ.720 குறைந்து ரூ.66,480-க்கு விற்பனையான நிலையில், இன்று சவரனுக்கு ரூ. 200 குறைந்த... மேலும் பார்க்க

அடுத்த 2 மணி நேரத்துக்கு 4 மாவட்டங்களில் மழை!

அடுத்த 2 மணி நேரத்துக்கு 4 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தென்கிழக்கு வங்கக்கடலில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தெற்கு வங்கக்க... மேலும் பார்க்க

அமைச்சர் நேருவின் மகன், சகோதரருக்குச் சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை!

தமிழக நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே. என். நேருவின் மகன், சகோதரர் வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.அமைச்சர் கே. என். நேருவின் சகோதரரின் கட்டுமான நிறுவனத்துக்குச் சொந்தமான ... மேலும் பார்க்க

பத்திரிகையாளர் மன்றத்துக்கு ரூ.2.50 கோடி ஒதுக்கீடு: துணை முதல்வர் உதயநிதி

சென்னை: பத்திரிகையாளர் மன்றத்துக்கு ரூ.2.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை(ஏப். 6) தெரிவித்தார். சென்னை பத்திரிகையாளர் மன்றம் நடத்திய கிரிக்கெட... மேலும் பார்க்க

பிரதமரை அவமானப்படுத்திய முதல்வருக்கு கண்டனம்: அண்ணாமலை

தமிழகம் வந்த பிரதமர் நரேந்திர மோடியை முதல்வர் ஸ்டாலின் அவமதித்து விட்டதாக பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.ராமேசுவரத்தில் புதிய பாம்பன் பாலத்தை திறப்பு விழாவில் கலந்து கொள்ள பிரதமர் நரேந்... மேலும் பார்க்க

மதுரையிலிருந்து தில்லிக்குப் புறப்பட்டார் பிரதமர் நரேந்திர மோடி!

மதுரை: பாம்பனில் புதிய பாலம் திறப்புவிழாவில் பங்கேற்ற பின் மதுரை சென்றடைந்த பிரதமர் நரேந்திர மோடி மதுரையில் இருந்து இன்று(ஏப். 6) மாலை தில்லிக்குப் புறப்பட்டார். தனி விமானத்தில் செல்லும் அவர், இன்றிரவ... மேலும் பார்க்க