செய்திகள் :

தொழிலாளி அடித்துக் கொலை; 9 போலீஸாருக்கு ஆயுள் தண்டனை; 25 ஆண்டுகளுக்குப் பின் வழங்கப்பட்ட தீர்ப்பு!

post image

தூத்துக்குடி அலங்காரத்தட்டு பகுதியைச் சேர்ந்தவர் வின்சென்ட். உப்பளத் தொழிலாளியான இவர், கடந்த 1999-ம் ஆண்டு தூத்துக்குடி ரூரல் பஞ்சாயத்து உறுப்பினராகவும், அலங்காரத்தட்டு ஊர்த் தலைவராகவும் இருந்து வந்தார். இவருக்கு கிருஷ்ணம்மாள் என்ற மனைவியும், 4 மகன்களும் உள்ளனர். கடந்த 17.09.1999 அன்று அதே பகுதியில் உள்ள விநாயகர் கோயில் திருவிழாவிற்கு அவரது நண்பரான முத்துவுடன் சென்றவர் இரவு வீடு திரும்பவில்லை.

வின்சென்ட்- டி.எஸ்.பி ராம கிருஷ்ணன்

இதற்கிடையில் தனது கணவர் வின்சென்ட்டை காணவில்லை என தாளமுத்துநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த நிலையில் 18.09.1999 அன்று காவல் நிலையத்தில் போலீஸார் தாக்கியதில் வின்சென்ட் உயிரிழந்துவிட்டதாக கிருஷ்ணம்மாளுக்கு தகவல் கிடைத்தது. வின்சென்டின் உறவினர்கள், பொதுமக்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டதுடன் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து கிருஷ்ணம்மாள் அளித்த புகாரின் அடிப்படையில் ஆர்.டி.ஓ விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில் பல தகவல்கள் அம்பலமானது.

வின்சென்ட், முத்து, மரியதாஸ் ஆகியோர் வெடி பொருட்கள் வைத்திருந்ததாக  விசாரணைக்கு தாளமுத்து காவல் நிலையத்திற்கு மூன்று பேரும் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். அப்போதைய ஆய்வாளர் சோம சுந்தரம் தலைமையிலான போலீஸாரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அப்போது பணியில் இருந்த போலீஸார் மூன்று பேரையும் கடுமையாகத் தாக்கியுள்ளனர். இதில் வின்சென்ட் காவல் நிலையத்திலேயே உயிரிழந்தார். பிரேத பரிசோதனையிலும் தாக்கப்பட்டது உறுதியானது.

அரசு தரப்பு வழக்கறிஞர்- ஆனந்த் கேபிரியேல்

இதனையடுத்து அப்போதைய ஆய்வாளர் சோமசுந்தரம், இறந்த நேரத்தில் பணியில் இருந்த ஜெயசேகரன், ஜோசப்ராஜ், செல்லதுரை, வீரபாகு, சிவசுப்பிரமணியன், சுப்பையா, உதவி ஆய்வாளர் ராம கிருஷ்ணன் ஆகிய 11 பேர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணை தூத்துக்குடி, மதுரை உள்ளிட்ட நீதிமன்றங்களில் நடந்து வந்தது. கடந்த 2024-ம் ஆண்டு ஜூலை மாதம் தூத்துக்குடி 1வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. இவ்வழக்கினை நீதிபதி தாண்டவன் விசாரணை செய்து வந்தார்.

குற்றம்சாட்டப்பட்ட 11 பேரும் நேற்று (5-ம் தேதி) ஆஜர்படுத்தப்பட்டனர். இந்த வழக்கில் 7வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்த முன்னாள் எஸ்.எஸ்.ஐ  சிவசுப்பிரமணியன் 9வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்த முன்னாள் தலைமை காவலர் ரத்தினசாமி ஆகியோர் மீதான குற்றம் சரிவர நிரூபிக்கப்படவில்லை எனக் கூறி இருவரையும் விடுதலை செய்தார். மற்ற 9 பேருக்கும் தலா ரூ.10 ஆயிரம் அபராதமும், தலா ஒரு ஆயுள் தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார். ஆய்வாளர் சோமசுந்தரம் தற்போதும் தூத்துக்குடி மாவட்ட நில அபகரிப்பு பிரிவில் ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார்.

தூத்துக்குடி நீதிமன்றங்கள்

ஜெயசேரன், செல்லதுரை, வீரபாகு, சுப்பையா, பாலசுப்பிரமணியன் ஆகியோர் வழக்கு விசாரணையின்போது சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். அவர்கள் முழுமையாக ஓய்வு பெற அரசு அனுமதிக்கவில்லை. இந்த சம்பவம் நடந்து 25 ஆண்டுகள் ஆன நிலையில், தற்போது தண்டனை பெற்றவர்கள் இந்த வழக்கினை விசாரிக்காமல் இருப்பதற்காக மட்டும் 28 முறை தடை உத்தரவு பெற்றுள்ளனர் என்பது ஆவணங்கள் மூலம் தெரிய வருகிறது. டி.எஸ்.பி உட்பட 9 போலீஸாருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது தென் மாவட்டங்களிலேயே இதுதான் முதல்முறை எனக் கூறப்படுகிறது.  

அரசுப் பள்ளிக் கட்டடத்தில் இளம்பெண்ணுடன் இரவில் தங்கிய போதை இளைஞர்! - திருச்சி அதிர்ச்சி

திருச்சி மாவட்டம், லால்குடி அடுத்து வாளாடியில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த நிலையில், இந்தப் பள்ளி வளாகத்தின் பின... மேலும் பார்க்க

கரூர்: 'கழிவறைக்குச் செல்ல மாணவிகளுக்கு தனி பதிவேடு!' - சர்ச்சையில் அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர்

கரூர் மாவட்டம், தான்தோன்றிமலை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கோயம்பள்ளி அரசு உயர்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருபவர் செந்தில்வடிவு. இவர், பள்ளியில் மாணவிகள் பயன்படுத்தும் கழிவறைக்கு கால... மேலும் பார்க்க

மோசடி புகார்: `கோ ஃபிரீ சைக்கிள்’ அலுவலகத்துக்கு சீல்; வங்கிக் கணக்குகளை முடக்கிய அமைலாக்கத்துறை!

முதலீட்டு மோசடி புகார்அயல் நாடுகள் மற்றும் அயல் மாநிலங்களில் இருந்து புதுச்சேரிக்கு சுற்றுலா வரும் பயணிகள், இ-பைக், ஆட்டோ, ரிக்‌ஷா, வாடகை இருசக்கர வாகனங்கள் போன்றவற்றின் மூலம் சுற்றுலாத்தலங்களை பார்வை... மேலும் பார்க்க

``நவராத்திரியில் மாதவிடாய்; விரதம் இருக்க முடியவில்லை..'' - மன உளைச்சலில் விபரீத முடிவெடுத்த பெண்!

உத்தரப்பிரதேச மாநிலம் ஜான்சியை சேர்ந்தவர் பிரியன்ஷா சோனி (36). ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு கொண்டிருந்தார். கடந்த 30-ம் தேதி வசந்த நவராத்திரி விழா தொடங்கியது. வீட்டில் சிறப்பு பூஜைகள் செய்து வழிபட முடிவு... மேலும் பார்க்க

வாட்ஸ்அப்க்கு வந்த இன்ஸ்டா லிங்க் - ரூ.150க்கு ஆசைப்பட்டு ரூ.61 லட்சத்தை இழந்த மராத்தி நடிகர்!

நாட்டில் நாளுக்கு நாள் ஆன்லைன் மோசடிகள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இந்த மோசடியில் பொதுமக்கள் தொடர்ந்து கோடிக்கணக்கான பணத்தை இழந்து வருகின்றனர். அந்த பட்டியலில் மராத்தி நடிகர் சாகர் கராண்டே என்பவரும... மேலும் பார்க்க

'டெல்லி க்ரைம் பிராஞ்ச்ல இருந்து வரேன்' - கோவையில் சிக்கிய போலி அதிகாரி; அலட்சியம் காட்டியதா போலீஸ்?

டிஜிட்டல் அரெஸ்ட் என்கிற சைபர் க்ரைம் மோசடி நாடு முழுவதும் அதிகரித்து கொண்டிருக்கிறது. இந்த மோசடியில் போலி அதிகாரிகள் வீடியோ கால் மூலம் வந்து மிரட்டி பணம் சம்பாதித்து வந்தனர். இந்நிலையில் போலி அதிகாரி... மேலும் பார்க்க