``இண்டியா, பாஜக, விஜய் அணி என 3 கூட்டணிகள் தேர்தலில் களமிறங்கும்'' - மாணிக்கம் த...
நடிகர் ஸ்ரீதர் காலமானார்!
நடிகர் சஹானா ஸ்ரீதர் உடல்நலக்குறைவால் சென்னையில் காலமானார்.
பாலு மகேந்திராவின் அழியாத கோலங்கள், வி.ஐ.பி, ராஜவம்சம் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் ஸ்ரீதர் சுப்ரமணியன் (62). குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமானவர், தமிழ் மற்றும் மலையாளப் படங்களில் துணைக் கதாபாத்திரங்களில் நடித்தார்.
ஆனால், வெள்ளித்திரையில் பெரிய வெளிச்சம் கிடைக்காததால் சின்னத்திரை தொடர்களில் கவனம் செலுத்தினார்.
அப்படி, வள்ளி வேலன், தாமரை, சித்தி - 2 போன்ற தொடர்களில் நடித்து பிரபலமானவருக்கு சஹானா தொடர் நல்ல கவனத்தைப் பெற்றுக்கொடுத்தது. இத்தொடருக்குப் பின்பே சஹானா ஸ்ரீதர் என அழைக்கப்பட்டார்.
இந்த நிலையில், சென்னை தி. நகரில் குடும்பத்துடன் வசித்துவந்த ஸ்ரீதருக்கு நேற்று (ஏப். 5) திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. உடனடியாக அருகிலுள்ள மருத்துவனைக்குச் செல்வதற்கு ஸ்ரீதர் உயிரிழந்தார். இறப்பிற்குக் காரணம் மாரடைப்புதான் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
வெள்ளித்திரையைவிட சின்னத்திரை ரசிகர்களுக்கு நன்கு அறிமுகமான நடிகர் ஸ்ரீதர் மறைவு ரசிகர்களுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.
இதையும் படிக்க: விக்ரமுக்கு இப்படியொரு ரசிகர்களா?