கோவை: வள்ளி கும்மி நடனத்தில் கின்னஸ் சாதனை படைத்த 16,000 பெண்களுக்கு பாராட்டு வி...
குட் பேட் அக்லி சிறப்புக் காட்சிகள் ரத்து!
பெங்களூரு, கேரளத்தில் குட் பேட் அக்லிக்கான முதல் காட்சிகளின் நேரம் மாற்றப்பட்டுள்ளதாகத் தகவல்.
நடிகர் அஜித் குமார் - இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணியில் உருவான குட் பேட் அக்லி திரைப்படம் ஏப். 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
படத்தின் டீசர் மற்றும் டிரைலர் ரசிகர்களைக் கவர்ந்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளது.
இந்த நிலையில், தமிழகத்தில் வழக்கம்போல் முதல் காட்சி காலை 9 மணிக்கு துவங்குகிறது. ஆனால், பெங்களூரு மற்றும் கேரளத்தில் காலை 6 மணிக்கே முதல் காட்சிகள் துவங்கிவிடும். பலரும் முதல் நாள் முதல் காட்சியைப் பெங்களூரு மற்றும் தமிழக - கேரள எல்லையோர திரையரங்குகளில் காண்பார்கள்.
ஆனால், குட் பேட் அக்லியின் முதல்காட்சி பெங்களூருவில் காலை 8.30 மணிக்கும் கேரளத்தில் காலை 9 மணிக்கும் துவங்கும் படியாக தயாரிப்பு நிறுவனம் மற்றும் விநியோகிஸ்தர்கள் இணைந்து திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனால், அஜித் ரசிகர்கள் சிறிது ஏமாற்றம் அடைந்துள்ளதாகத் தெரிகிறது.