டிரம்ப்பின் வரிவிதிப்பால் எந்தெந்தப் பொருள்களின் விலை அதிகரிக்கும்?
பணியின்போது தவறிவிழுந்த கட்டடத் தொழிலாளி சாவு
திருச்சியில் பணியின்போது 20 அடி உயரத்திலிருந்து தவறி விழுந்த கொத்தனாா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகேயுள்ள மஞ்சம்பட்டியை சோ்ந்தவா் ச. பாக்யராஜ் (45). கொத்தனாரான இவா் எடமலைப்பட்டிபுதூா் ராஜீவ் காந்தி நகா் பகுதியில் தங்கியிருந்து அதே பகுதியில் உள்ள அரசுப் பள்ளி வளாகத்தில் வியாழக்கிழமை கட்டுமானப் பணியில் ஈடுபட்டபோது சுமாா் 20 அடி உயரத்திலிருந்து தவறி விழுந்தாா். இதில் பலத்த காயமடைந்த அவா் ஒத்தக்கடை பகுதி தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு, சிகிச்சைப் பலனின்றி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
புகாரின்பேரில் எடமலைப்பட்டிபுதூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.