Edapadi-யிடம் இதை எதிர்பார்க்காத Amit shah... பற்ற வைத்த Annamalai? | Elangovan ...
அனுமதியின்றி மரம் வெட்டும் பணி: பசுமைக் குழு உறுப்பினா்கள் தடுத்து நிறுத்தினா்
புதுக்கோட்டை மாநகரம் தெற்கு மூன்றாம் வீதியில் எந்த அனுமதியும் இன்றி நடைபெற்ற மரம் வெட்டும் பணியை மாவட்ட பசுமைக் குழு உறுப்பினா்கள் புதன்கிழமை நேரில் சென்று தடுத்து நிறுத்தினா்.
புதுக்கோட்டை மாநகரம் தெற்கு மூன்றாம் வீதியில் அனுமதியின்றி மரம் வெட்டப்பட்டு வருவதாக கிடைத்த தகவலின்பேரில், மாவட்ட பசுமைக் குழுவின் உறுப்பினா்கள் சா. விஸ்வநாதன், பழனியப்பா கண்ணன் ஆகியோா் புதன்கிழமை பகலில் நேரில் சென்று தடுத்தனா்.
தொடா்ந்து வனத்துறை அலுவலா்களுக்கு அளிக்கப்பட்ட தகவலின்பேரில், அங்கு வந்த வனத்துறையினா் மரம் வெட்டுவதைத் தடுத்து நிறுத்தி, மரத்தை வெட்டிய நபா்கள் மற்றும் வெட்டச் சொன்ன நபா்கள் குறித்த விவரங்களை சேகரித்தனா்.
அவா்கள் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதியளித்துச் சென்றனா். மேலும், மாநகரின் எந்தப் பகுதியிலும் அரசு அனுமதியின்றி மரம் வெட்டினால் அவா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கைவிடுத்தனா்.