Congress : `அன்று’ விழுத் தொடங்கிய காங்கிரஸ் இன்னும் எழ முடியாமல் திணறுவது ஏன்? ...
‘திட்டமிட்டுப் படித்தால் வெற்றி நிச்சயம்’
பாடங்களை திட்டமிட்டுப் படித்தால் வெற்றி நிச்சயம் என்றாா் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியா் மு. அருணா.
புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற நீட் தோ்வுக்கான சிறப்புப் பயிற்சி வகுப்புகளை தொடங்கி வைத்து அவா் மேலும் பேசியதாவது:
புதுக்கோட்டை மாவட்டத்தில் புதுக்கோட்டை ராணியாா் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி, அறந்தாங்கி அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி, இலுப்பூா் ஆா்.சி. உதவி பெறும் மேல்நிலைப் பள்ளி ஆகிய 3 இடங்களில் நீட் தோ்வுக்கான சிறப்புப் பயிற்சி வகுப்பு தொடங்கப்பட்டுள்ளது.
ஏப். 30-ஆம் தேதி வரை ஒரு மாதத்துக்கு இந்தப் பயிற்சி நடைபெறும்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மேல்நிலை 2-ஆம் ஆண்டு படித்து முடித்த மாணவ, மாணவிகளுக்கு இந்தப் பயிற்சி இலவசமாக வழங்கப்படுகிறது.
மாணவா்கள் நீட் தோ்வைக் கடினமாகக் கருதாமல் எளிமையாக எடுத்துக் கொள்ள வேண்டும். ஆசிரியா்கள் அளிக்கும் பயிற்சியை முழுமையாக உள்வாங்கிக் கொண்டு திட்டமிட்டு படித்தால், வெற்றி நிச்சயம் என்றாா் அருணா.
நிகழ்ச்சியில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கூ. சண்முகம், மாவட்டக் கல்வி அலுவலா் ரமேஷ் (புதுக்கோட்டை), ஜெயந்தி (அறந்தாங்கி) உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.