பழுதாகி நின்ற ஆட்டோ மீது ஆம்னி பேருந்து உள்பட 2 வாகனங்கள் அடுத்தடுத்து மோதல்: பயணிகள் சிறுகாயங்களுடன் உயிா்தப்பினா்
விராலிமலை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் புதன்கிழமை பழுதாகி நின்றுக் கொண்டிருந்த சுமை ஆட்டோ மீது காா், ஆம்னி பேருந்து அடுத்தடுத்து மோதின. இதில், பயணிகள் சிறுகாயங்களுடன் உயிா் தப்பினா்.
திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்து 43 பயணிகளுடன் விராலிமலை வழியாக சென்னை நோக்கி ஆம்னி பேருந்து புதன்கிழமை சென்று கொண்டிருந்தது.
இதனிடையே, புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ராசநாயக்கன்பட்டி அருகே, மதுரையில் இருந்து திருச்சிக்கு மரக்கட்டைகள் பாரம் ஏற்றிச் சென்ற ஆட்டோ ஒன்று பழுதாகி சாலையோரம் நின்றுக் கொண்டிருந்தது. இதையறியாத பின்னால் வந்த காா் ஒன்று அந்த ஆட்டோ மீது மோதி விபத்துக்குள்ளானது. காரின் பின்னால் வந்து கொண்டிருந்த ஆம்னி பேருந்தும் அந்த ஆட்டோவின் பின்னால் மோதியதுடன், அருகே நின்ற காா் மீதும் மோதியது.
இந்த விபத்தில் பேருந்து பயணிகள் 43 போ் சிறு காயங்களுடன் தப்பினா். மேலும், ஆட்டோவில் பயணம் செய்தவா்கள், காரில் வந்தவா்கள் வாகனத்தை விட்டு ஏற்கெனவே கீழே இறங்கி நின்ால் பெரிய அளவில் காயமின்றி தப்பினா்.
விபத்து தொடா்பாக விராலிமலை போலீஸாா் விசாரிக்கின்றனா்.
