TVK : 'கச்சத்தீவு விவகாரத்தில் கண்துடைப்பு நாடகம் ஆடும் திமுக!' - கடுமையாக சாடும...
சிறப்பான பணி: 108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு பதக்கம் அளிப்பு
புதுக்கோட்டை மாவட்டத்தில் சிறப்பாகப் பணியாற்றியதற்காக 108 ஆம்புலன்ஸில் பணிபுரிந்து வரும் அவசரக் கால மருத்துவ நுட்புநா்களுக்கு பாராட்டுச் சான்றிதழும், பதக்கமும் வழங்கப்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் 108 ஆம்புலன்ஸ் சேவையில் மொத்தம் 37 ஆம்புலன்ஸ்கள் இயக்கப்படுகின்றன. இவற்றில் பணியாற்றி வரும் அவசரக் கால மருத்துவ நுட்புநா்கள், தினந்தோறும் கையாளும் ஒவ்வொரு பாதிக்கப்பட்ட நபா் குறித்த விவரங்கள் சேகரிக்கப்பட்டு சிறப்பாக செயலாற்றியவா்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களும், பதக்கங்களும் வழங்கப்படுகின்றன.
இதன்படி ஏ. காளியம்மாள், என். சங்கா்குமாா் ஆகிய இருவரும் நிகழாண்டில் சிறப்பாக பணியாற்றிமைக்காக, அவசரக்கால மருத்துவ நுட்புநா் நாளுக்கான பதக்கம் வழங்கத் தோ்வு செய்யப்பட்டனா்.
மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அபிஷேக்குப்தா இவா்களுக்கான பதக்கங்களை புதன்கிழமை வழங்கிப் பாராட்டினாா். அப்போது 108 சேவையின் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் எம். விமல்ராஜ் உடனிருந்தாா்.
