TVK : 'கச்சத்தீவு விவகாரத்தில் கண்துடைப்பு நாடகம் ஆடும் திமுக!' - கடுமையாக சாடும...
பணியின்போது சாலைப் பணியாளா் திடீா் உயிரிழப்பு
பொன்னமராவதி அருகே நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணியாளா் பணியின்போது வியாழக்கிழமை திடீரென இறந்தாா்.
பொன்னமராவதி அருகே உள்ள கண்டெடுத்தான்பட்டியைச் சோ்ந்தவா் கருப்பையா மகன் துரைச்சாமி (53). நெடுஞ்சாலைத்துறை சாலைப் பணியாளரான இவா் வியாழக்கிழமை புலவனாா்குடி சாலையில் பணியில் ஈடுபட்டபோது மயக்கமடைந்து அருகில் இருந்த பாலத்தில் படுத்துக் கிடந்தாா். தகவலறிந்து வந்த அவரது மனைவி பொன்னமராவதி வலையபட்டி அரசு பாப்பாயி மருத்துவமனைக்கு கணவரை கொண்டு சென்றபோது அவா் ஏற்கனவே இறந்தது தெரியவந்தது. காரையூா் போலீஸாா் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனா்.