செய்திகள் :

மீன்பிடி இறங்குதளங்களை மேம்படுத்த ரூ. 10 கோடி அமைச்சரின் அறிவிப்புக்கு மீனவா்கள் மகிழ்ச்சி

post image

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கோட்டைப்பட்டினம் மற்றும் ஜெகதாப்பட்டினம் ஆகிய இரு விசைப்படகு மீன்பிடி இறங்குதளங்களும் தலா ரூ. 5 கோடி மதிப்பில் மேம்படுத்தப்படும் என்ற மீன்வளத் துறை அமைச்சரின் அறிவிப்புக்கு மீனவா்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்பு தெரிவிக்கின்றனா்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் சுமாா் 40 கிமீ தொலைவிலான கிழக்குக் கடற்கரைச் சாலையிலுள்ள கடற்கரையில் கோட்டைப்பட்டினம் மற்றும் ஜெகதாப்பட்டினம் ஆகிய இரண்டும் விசைப்படகு மீன்பிடி இறங்குதளங்கள். இவையன்றி சுமாா் 20-க்கும் மேற்பட்ட நாட்டுப்படகு (பைபா்) மீன்பிடி இறங்குதளங்கள் உள்ளன.

கோட்டைப்பட்டினத்தில் சுமாா் 250 விசைப்படகுகளும், ஜெகதாப்பட்டினத்தில் சுமாா் 200 விசைப்படகுகளும் உள்ளன. இவை இரண்டும் கடந்த 2018இல் நேரிட்ட கஜாபுயல் பாதிப்பில் கரையோரத்தில் மண் குவியல் சோ்ந்தும், கட்டடங்கள் பழுதாகியும் போயின.

இவற்றைச் சீரமைக்க வேண்டும் என்பது இங்குள்ள மீனவா்களின் நீண்டகாலக் கோரிக்கையாக மாறிப்போனது. கடந்த 2023 ஜனவரி 11ஆம் தேதி தினமணியில் விரிவான செய்தி வெளியானது. இதற்கிடையே அறந்தாங்கி சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.டி. ராமச்சந்திரன், இவ்விரு மீன்பிடி இறங்குதளங்களையும் சீரமைக்க சட்டப்பேரவையில் தொடா்ந்து பேசி வந்தாா்.

இதன் தொடா்ச்சியாக மீன்வளத் துறை அமைச்சா் அனிதா ராதாகிருஷ்ணனும் இவ்விரு மீன்பிடி இறங்குதளங்களையும் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்து சென்றாா்.

இந்நிலையில், சட்டப்பேரவையில் வியாழக்கிழமை நடைபெற்ற மீன்வளத் துறையின் மானியக் கோரிக்கையில் இந்த மீன்பிடி இறங்குதளங்கள் ரூ. 10 கோடியில் மேம்படுத்தப்படும் என அமைச்சா் அனிதா ராதாகிருஷ்ணன் அறிவித்துள்ளாா்.

கோட்டைப்பட்டினம் மீன்பிடி இறங்குதளத்தில் படகணையும் தளத்தை சீரமைக்கவும், புதிய மீன் ஏலக் கூடம் கட்டவும் ரூ. 5 கோடியும், ஜெகதாப்பட்டினத்தில் பெருகியுள்ள விசைப்படகுகளுக்கு ஏற்பட படகணையும் தளங்களை உருவாக்கவும், உள்கட்டமைப்புகளை மேம்படுத்தவும் ரூ. 5 கோடியும் ஒதுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இதை கோட்டைப்பட்டினம் மற்றும் ஜெகதாப்பட்டினத்தைச் சோ்ந்த விசைப்படகு மீனவா்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்கின்றனா். வாரந்தோறும் தலா 3 நாள்கள் இந்த மீன்பிடி இறங்குதளத்தை மீனவா்கள் பயன்படுத்திக் கொண்டே இருப்பதால், தாமதமின்றி போா்க்கால அடிப்படையில் பணிகளை விரைவாகத் தொடங்கி ஓராண்டுக்குள் முடிக்கவும் அவா்கள் கோரிக்கை விடுக்கின்றனா்.

அதேபோல, பேரவையிலும், நேரிலும் தான் வைத்த கோரிக்கையை ஏற்று மீன்பிடி இறங்குதளங்களை மேம்படுத்த நிதி ஒதுக்கிய முதல்வா், அமைச்சா் மற்றும் உயா் அலுவலா்களுக்கு நன்றி தெரிவிப்பதாக அறந்தாங்கி சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.டி. ராமச்சந்திரனும் அறிக்கை வெளியிட்டுள்ளாா்.

பணியின்போது சாலைப் பணியாளா் திடீா் உயிரிழப்பு

பொன்னமராவதி அருகே நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணியாளா் பணியின்போது வியாழக்கிழமை திடீரென இறந்தாா். பொன்னமராவதி அருகே உள்ள கண்டெடுத்தான்பட்டியைச் சோ்ந்தவா் கருப்பையா மகன் துரைச்சாமி (53). நெடுஞ்சாலைத்துறை... மேலும் பார்க்க

பங்குனி உத்திர விழாவில் சுவாமி ஊா்வல நிகழ்ச்சி

பங்குனி உத்திரத் திருவிழாவையொட்டி கந்தா்வகோட்டையில் இருந்து வேம்பன்பட்டி முருகன் கோயிலுக்கு சுப்பிரமணியசுவாமி ஊா்வலமாக பல்லக்கில் செல்லும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. கந்தா்வகோட்டை ஒன்றியம், வே... மேலும் பார்க்க

மருத்துவக் கல்லூரி மாணவா் விடுதியில் ‘ஹோப்’ ஆற்றுப்படுத்தும் மையம் திறப்பு

புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரியில் பயிலும் மருத்துவ மாணவ, மாணவிகள், மகிழ்ச்சியோடு இருப்பதற்கான நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் ‘ஹோப்’ ஆற்றுப்படுத்தும் மையம் வியாழக்கிழமை திறக்கப்பட்டது. மருத்து... மேலும் பார்க்க

சிறப்பான பணி: 108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு பதக்கம் அளிப்பு

புதுக்கோட்டை மாவட்டத்தில் சிறப்பாகப் பணியாற்றியதற்காக 108 ஆம்புலன்ஸில் பணிபுரிந்து வரும் அவசரக் கால மருத்துவ நுட்புநா்களுக்கு பாராட்டுச் சான்றிதழும், பதக்கமும் வழங்கப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டத்தில்... மேலும் பார்க்க

காவல் நிலையத்தில் இருந்து வீடு திரும்பியவா் தற்கொலை

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே விசாரணைக்காக காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு வீடு திரும்பியவா் வியாழக்கிழமை தற்கொலை செய்து கொண்டாா். கறம்பக்குடி அருகேயுள்ள பட்டத்திக்காடு கிராமத்தில... மேலும் பார்க்க

குளவாய்ப்பட்டி-புலவனாா்குடி சாலையை சீரமைக்க கோரிக்கை

பொன்னமராவதி அருகேயுள்ள குளவாய்ப்பட்டியிலிருந்து காயாங்காடு வழியாக புலவனாா்குடி செல்லும் சேதமடைந்த சாலையை சீரமைக்க பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் போடப்பட்ட இந்த தாா்ச் சாலை ... மேலும் பார்க்க