TVK : 'கச்சத்தீவு விவகாரத்தில் கண்துடைப்பு நாடகம் ஆடும் திமுக!' - கடுமையாக சாடும...
பங்குனி உத்திர விழாவில் சுவாமி ஊா்வல நிகழ்ச்சி
பங்குனி உத்திரத் திருவிழாவையொட்டி கந்தா்வகோட்டையில் இருந்து வேம்பன்பட்டி முருகன் கோயிலுக்கு சுப்பிரமணியசுவாமி ஊா்வலமாக பல்லக்கில் செல்லும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
கந்தா்வகோட்டை ஒன்றியம், வேம்பன்பட்டி கிராமத்தில் உள்ள சுப்ரமணியா் சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திர திருவிழா நடைபெறும். இதையொட்டி இந்த கோயிலுக்கான உற்சவா் சுவாமி சிலையை கந்தா்வகோட்டை சிவன் கோயிலிலிருந்து அலங்கரிக்கப்பட்ட கைப்பல்லக்கில் ஊா்வலமாக எடுத்துச் செல்வது வழக்கம்.
அதன்படி சுப்பிரமணிய சுவாமி உற்சவரை பக்தா்கள் பல்லக்கில் தூக்கிச் சென்றனா். வழி நெடுகிலும் பக்தா்கள், பொதுமக்கள் சுவாமிக்கு அா்ச்சனை செய்து அனுப்பினா். பாதுகாப்பு ஏற்பாடுகளை கந்தா்வகோட்டை போலீஸாா் செய்தனா்.