வரலாறு காணாத சரிவில் பங்குச் சந்தை! ரூ. 20 லட்சம் கோடி இழப்பு!! காரணம் என்ன?
மருத்துவக் கல்லூரி மாணவா் விடுதியில் ‘ஹோப்’ ஆற்றுப்படுத்தும் மையம் திறப்பு
புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரியில் பயிலும் மருத்துவ மாணவ, மாணவிகள், மகிழ்ச்சியோடு இருப்பதற்கான நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் ‘ஹோப்’ ஆற்றுப்படுத்தும் மையம் வியாழக்கிழமை திறக்கப்பட்டது.
மருத்துவக் கல்லூரி முதல்வா் டாக்டா் எஸ். கலைவாணி இந்த மையத்தை திறந்து வைத்தாா். துணை முதல்வா் எஸ். ராமலதாராணி, இருக்கை மருத்துவ அலுவலா் ஏ. இந்திராணி, விடுதி தலைமைக் கண்காணிப்பாளா் ஜி. ரமேஷ்பிரபு உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.
ஏற்கெனவே இந்தக் கல்லூரியில், தேசிய மனநலத் திட்டத்தின் கீழ் மாணவா்களுக்கு மனநல பாதுகாப்பையும், ஆலோசனைகளையும் வழங்கும் வகையில் மனநல நல்லாதரவு மன்றங்கள் (மனம்) செயல்படும் நிலையில், விடுதிகளில் புதிதாக ‘ஹோப்’ மையம் தொடங்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.