Doctor Vikatan: எப்போதும் ஈரமாக இருக்கும் உள்ளாடை, ஏதேனும் பிரச்னையின் அறிகுறியா...
இலுப்பக்கோரை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் குடமுழுக்கு!
இலுப்பக்கோரை அருள்மிகு சுப்பிரமணியசுவாமி மற்றும் பரிவார தெய்வங்கள் ஆலயம் குடமுழுக்கு விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்துகொண்டு கோபுர தரிசனம் செய்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் தாலுக்கா, இலுப்பக்கோரை கிராமத்தில் எழுந்தருளியிரும் அருள்மிகு சுப்பிரமணியசாமி மற்றும் பரிவார தெய்வங்களுக்கு கோயில் பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டு பணிகள் முழுமையாக முடிக்கப்பட்ட நிலையில் குடமுழுக்கு விழாவிற்கான ஏற்பாடுகள் தொடங்கின. குடமுழுக்கு விழாவை முன்னிட்டு கடந்த 5ஆம் தேதி விக்னேஷ்வர பூஜையுடன் முதல் கால யாகசாலை பூஜைகள் தொடங்கியது.
இன்று நான்காம் கால யாகசாலை பூஜைகள் நிறைவுபெற்று. அதனை தொடர்ந்து மேள தாளங்கள் முழங்க கடம் புறப்பாடு, நடைபெற்றது. தொடர்ந்து விமான சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க கலசம் மற்றும் மூலவர், பரிவார தெய்வங்களின் கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி குடமுழுக்கு வெகு விமர்சையாக நடைபெற்றது. தொடர்ந்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
குடமுழுக்கு விழாவிற்கான ஏற்பாடுகளை இலுப்பக்கோரை கிராமவாசிகள் செய்திருந்தனர். குடமுழுக்கு விழாவில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.