செய்திகள் :

எறும்பீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்: திரளானோர் பங்கேற்பு!

post image

எறும்பீஸ்வரர் கோயில் கும்பாபிஷேக விழா இன்று நடைபெற்றது. பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் பங்கேற்புடன் விமர்சையாக நடைபெற்றது.

திருவெறும்பூர் என பெயர் வர காரணமான நறுங்குழல் நாயகி உடனுறை எறும்பீஸ்வரர் கோயில் கும்பாபிஷேக விழா கடந்த மாதம் 3ம் தேதி பந்தக்கால் நட்டு துவங்கியது. இதற்காக கடந்த 4ம் தேதி காவிரியில் இருந்து புனித நீர் எடுத்து வரப்பட்டு மாலை முதல் யாக சால பூஜை தொடங்கியது. அதன் பிறகு ஐந்து மற்றும் ஆறாம் தேதிகளில் காலை மாலை என இரு நேரங்களிலும் யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து 7ம் தேதியான இன்று காலை ஐந்து மணிக்கு நிறம் கொள் கண்டத்து நின்மலனுக்கு ஆறாம் காலம் பூஜை ஆரம்பமானது. மங்கல இசை தேவார பாராயணம் விக்னேஸ்வர பூஜை புண்ணியா ஹவாசனம் யாக பூஜை ஹோமம் வேதப்பாராயணம் மூல மந்த் ஹோமம் பிரதியாக ஊதி நடைபெற்றது.

அடுத்து காலை 7:10 மணிக்கு மகாபூர்ணகுதி உபசார பூஜை யாத்திரா தானம் நடைபெற்றது. அதன் பிறகு 9:30 மணிக்கு ஸ்ரீ சுவாமி அம்பாள் சிறிய ராஜகோபுரம் முதலான விமானங்கள் கும்பாபிஷேகம் நடந்தது காலை 10 மணிக்கு ஸ்ரீ விநாயகர் ஸ்ரீ சண்முகர், ஸ்ரீ எருமீஸ்வரர் ஸ்ரீ நறுங்குழல் நாயகி ஸ்ரீ சண்டிகேஸ்வரர் ஆகிய மூலஸ்தான மூர்த்திகளுக்கு மகா கும்பாபிஷேகம் மிகச் சிறப்பாக நடைபெற்றது. இதில் பல்லாயிரம் பக்தர்கள் கலந்துகொண்டு ஓம் நமசிவாய என்ற விண்ணதிர முழங்கினர். பின்னர் பக்தர்கள் மேல் புனித நீர் தெளிக்கப்பட்டது.மாலை நாலு மணிக்கு மகாபிஷேகம் தீபாரதனை பிரசாதம் வழங்குதல் நிகழ்ச்சியும் இரவு 7 மணிக்கு உமையவள் தம் பெருமானுக்கு திருக்கல்யாணமும் இரவு 9 மணிக்கு பஞ்சமூர்த்தி திருவீதி உலாவும் நடைபெற உள்ளது.

இந்த கும்பாபிஷேக விழா 27 ஆண்டுகளுக்குப் பிறகு நடத்தப்படுவதால் திருவெறும்பூர் மற்றும் அதன் சுற்றுவட்ட பகுதிகளை சேர்ந்த சுமார் 10, ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டனர். பொது மக்களுக்கு பாதுகாப்பு வழங்க கோயில் முன்பு திருவெறும்பூர் புறக் காவல் நிலையம் அமைக்கப்பட்டு திருவெறும்பூர் ஏஎஸ்பி பனாபத் அரவிந்த் மற்றும் இரண்டு ஏடிஎஸ்பிகள் தலைமையில் சுமார் 200 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். கோயில் வளாகத்தில் 16 இடங்களில் போலீஸார் சிறப்பு கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி கண்காணித்து வந்தனர்.

சுட்டெரிக்கும் வெயில் - புகைப்படங்கள்

கொளுத்தும் வெயிலிருந்து தப்பிக்க தலையில் துப்பட்டாவை அணிந்து செல்லும் இளம் பெண்.கோடை வெயிலை முன்னிட்டு பனியன் அணிந்து செல்லும் பெண்.வெப்பத்தை தனிக்க ஆற்றில் விளையாடும் சிறுவர்கள்.படேல் சௌக்கில் உள்ள ந... மேலும் பார்க்க

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் திருத்தேரோட்டம் - புகைப்படங்கள்

வெள்ளி சூரிய, சந்திர பிரபை, பூத வாகனம், நாக வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் சுவாமி, அம்பாள் எழுந்தருளி வீதி உலா நடைபெறும்.விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று இனிதே நடைபெற்றது.விழா நாட்களில் ... மேலும் பார்க்க

நானியின் ஹிட் 3 படத்தின் 2-ஆவது பாடல்!

பிரபல தெலுங்கு நடிகர் நானி நடித்துள்ள ஹிட் 3 படத்தின் 2ஆவது பாடல் வெளியானது. நானியின் முந்தைய படங்களான ‘ஷியாம் சிங்கா ராய்’, ‘அடடே சுந்தரா’ படங்கள் அமோக வரவேற்பினைப் பெற்றன. அதனைத் தொடர்ந்து வெளியான த... மேலும் பார்க்க

பிரசாந்த் நீல் படத்தில் ஜூனியர் என்டிஆரின் படப்பிடிப்பு தேதி அறிவிப்பு!

பிரசாந்த் நீல் இயக்கும் படத்தில் ஜூனியர் என்டிஆர் படப்பிடிப்பில் கலந்துகொள்ளும் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. ஜூனியர் என்டிஆர் - பிரசாந்த் நீல் கூட்டணியில் உருவாகும் படத்தின் படப்பிடிப்பு கடந்த பிப்... மேலும் பார்க்க

தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் - 2025 (கும்பம்)

தமிழ்ப் புத்தாண்டு பலன்களைதினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் கணித்து வழங்கியுள்ளார்.கும்பம் (அவிட்டம் 3-ம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3-ம் பாதம் முடிய)கிரகநிலை:ராசியில் சனி - தன வா... மேலும் பார்க்க