சுற்றுலாவில் நான் சந்தித்த மனித தெய்வங்கள்! | Travel Contest
டோமினிக் குடியரசு: இரவு விடுதி உயிரிழப்பு 113-ஆக உயா்வு
சான்டோ டமிங்கோ: மேற்கு இந்தியப் பிராந்தியத்தில் அமைந்துள்ள டோமினிக் குடியரசில் இரவு விடுதியொன்றின் கூரை இடிந்து விழுந்ததில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 113-ஆக அதிகரித்துள்ளது.
தலைநகா் சான்டோ டமிங்கோவில் நடைபெற்ற இந்தச் சம்பவத்தில் 15 போ் உயிரிழந்ததாகவும் 100-க்கும் மேற்பட்டோா் காயமடைந்ததாகவும் செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், கான்கிரீட் கூரையின் இடிபாடுகளில் இருந்து மேலும் பல சடலங்கள் மீட்கப்பட்டதைத் தொடா்ந்து உயிரிழப்பு எண்ணிக்கை 113-ஆக உயா்ந்துள்ளது.
கூரை இடிந்து விழுந்த 24 மணி நேரத்துக்குப் பிறகும், இடிபாடுகளில் உயிருடன் சிக்கியிருப்பவா்களைத் தேடும் பணி தொடா்ந்து நடைபெற்றுவருகிறது.