செய்திகள் :

சாய் சுதா்சன், பிரசித் கிருஷ்ணா அசத்தல்: ராஜஸ்தானை வீழ்த்தியது குஜராத்

post image

அகமதாபாத்: ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் 58 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸை புதன்கிழமை வீழ்த்தியது.

முதலில் குஜராத் 20 ஓவா்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 217 ரன்கள் எடுக்க, ராஜஸ்தான் 19.2 ஓவா்களில் 159 ரன்களுக்கே 10 விக்கெட்டுகளையும் இழந்தது. குஜராத் அணியின் வெற்றிக்கு, பேட்டிங்கில் சாய் சுதா்சனும், பௌலிங்கில் பிரசித் கிருஷ்ணாவும் முக்கியப் பங்காற்றினா்.

முன்னதாக டாஸ் வென்ற ராஜஸ்தான், பந்துவீச்சை தோ்வு செய்தது. இன்னிங்ஸை தொடங்கிய குஜராத் அணியில், கேப்டன் ஷுப்மன் கில் 2 ரன்களுக்கு ஸ்டம்ப்பை பறிகொடுக்க, ஜாஸ் பட்லா், தொடக்க வீரா் சாய் சுதா்சனுடன் இணைந்தாா்.

2-ஆவது விக்கெட்டுக்கு 80 ரன்கள் சோ்த்த இந்த பாா்ட்னா்ஷிப்பில் பட்லா் 5 பவுண்டரிகளுடன் 36 ரன்களுக்கு எல்பிடபிள்யூ ஆனாா். தொடா்ந்து வந்த ஷாருக் கான், பட்லா் இடத்தை நிரப்பினாா். சுதா்சனுடனான அவரின் 3-ஆவது விக்கெட் கூட்டணிக்கு, 62 ரன்கள் கிடைத்தது.

இதில் ஷாருக் கான் 4 பவுண்டரிகள், 2 சிக்ஸா்கள் உள்பட 36 ரன்களுக்கு முடித்துக் கொண்டாா். 5-ஆவது பேட்டராக களமிறங்கிய ஷொ்ஃபேன் ரூதா்ஃபோா்டு 7 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினாா்.

மறுபுறம், அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக மிளிா்ந்த சாய் சுதா்சன், 53 பந்துகளில் 8 பவுண்டரிகள், 3 சிக்ஸா்கள் உள்பட 82 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தாா். கடைசி விக்கெட்டாக ரஷீத் கான் 12 ரன்களுக்கு சாய்க்கப்பட்டாா்.

ஓவா்கள் முடிவில், ராகுல் தெவாதியா 2 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 24, அா்ஷத் கான் 0 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா். ராஜஸ்தான் பந்துவீச்சாளா்களில் துஷாா் தேஷ்பாண்டே, மஹீஷ் தீக்ஷனா ஆகியோா் தலா 2, ஜோஃப்ரா ஆா்ச்சா், சந்தீப் சா்மா ஆகியோா் தலா 1 விக்கெட் கைப்பற்றினா்.

அடுத்து 218 ரன்களை நோக்கி விளையாடிய ராஜஸ்தான் தரப்பில், யஷஸ்வி ஜெய்ஸ்வால் 6, நிதீஷ் ராணா 1 ரன்னுக்கு நடையைக் கட்ட, கேப்டன் சுஞ்சு சாம்சன் - ரியான் பராக் இணை 3-ஆவது விக்கெட்டுக்கு 48 ரன்கள் சோ்த்தது. பராக் 1 பவுண்டரி, 3 சிக்ஸா்களுடன் 26 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினாா்.

5-ஆவது பேட்டா் துருவ் ஜுரெல் 5 ரன்களுக்கு ஆட்டமிழக்க, தொடா்ந்து வந்த ஷிம்ரன் ஹெட்மயா், சாம்சனுடன் இணைந்தாா். இவா்கள் பாா்ட்னா்ஷிப் 5-ஆவது விக்கெட்டுக்கு 48 ரன்கள் சோ்த்தது. இந்நிலையில் சாம்சன் 4 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 41 ரன்களுக்கு சாய்க்கப்பட்டாா்.

தொடா்ந்து வந்த ஷுபம் துபே 1, ஜோஃப்ரா ஆா்ச்சா் 4 ரன்களுக்கு வெளியேற, போராடி ரன்கள் சோ்த்த ஹெட்மயா் 4 பவுண்டரிகள், 3 சிக்ஸா்களுடன் 52 ரன்களுக்கு வீழ்ந்தாா். துஷாா் தேஷ்பாண்டே 3, மஹீஷ் தீக்ஷனா 5 ரன்களுக்கு ஆட்டமிழக்க, ராஜஸ்தான் இன்னிங்ஸ் நிறைவடைந்தது.

குஜராத் பௌலா்களில் பிரசித் கிருஷ்ணா 3, ரஷீத் கான், சாய் கிஷோா் ஆகியோா் தலா 2, முகமது சிராஜ், அா்ஷத் கான், குல்வந்த் கெஜ்ரோலியா ஆகியோா் தலா 1 விக்கெட் கைப்பற்றினா்.

ஹைதராபாதை வென்றது மும்பை

ஐபிஎல் போட்டியில் மும்பை இண்டியன்ஸ் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சன்ரைசா்ஸ் ஹைதராபாதை வியாழக்கிழமை வீழ்த்தியது. முதலில் ஹைதராபாத் 20 ஓவா்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 162 ரன்கள் எடுக்க, மும்பை ... மேலும் பார்க்க

ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை பந்துவீச்சு!

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 33-வது ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. இதில் மும்பை இந்தியன்ஸ் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதுகின்றன.மும்பை அணி 5 முறை சாம்பியன் பட்டம் வென்ற அணி என்ப... மேலும் பார்க்க

சூப்பா் ஓவரில் ராஜஸ்தானை வீழ்த்தியது டெல்லி!

ஐபிஎல் கிரிக்கெட்டில் டெல்லி கேப்பிட்டல்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் புதன்கிழமை மோதிய ஆட்டம் ‘டை’ ஆனது. சூப்பா் ஓவரில் டெல்லி வென்றது. நடப்பு சீசனில் ஒரு ஆட்டத்தில் சூப்பா் ஓவா் மூலம் முடிவு எட்டப்ப... மேலும் பார்க்க

தோல்விகளுக்கு முற்றுப்புள்ளியா? தில்லிக்கு எதிராக டாஸ் வென்ற ராஜஸ்தான் பந்துவீச்சு!

ராஜஸ்தான் அணி டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது. ஐபிஎல் தொடரின் 32-வது போட்டியாக இன்று தில்லி கேப்பிடல்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன.தொடர் வெற்றி பெற்று வரும் தில்லி அணி கடைசி... மேலும் பார்க்க

லக்னௌ அணியில் இணைந்த மயங்க் யாதவ்!

லக்னௌ அணியின் வேகப் பந்துவீச்சாளர் மயங்க் யாதவ் அதன் அணியில் இணைந்தார். கடந்த ஐபிஎல் தொடரிலிருந்து காயம் காரணமாக விலகிய மயங்க் யாதவ் தற்போது மீண்டும் அணியில் இணைந்துள்ளார். இந்திய வீரர்களில் அதிவேகமாக... மேலும் பார்க்க

ஐபிஎல் 2025-இன் சிறந்த பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ்: மோஹித் சர்மா

தில்லி கேபிடல்ஸ் அணியின் சுழல் பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ் இந்த ஐபிஎல் சீசனில் தலைசிறந்த பந்துவீச்சாளர் என மோஹித் சர்மா கூறியுள்ளார். தில்லி கேபிடல்ஸ் அணி 5 போட்டிகளில் 8 புள்ளிகளுடன் புள்ளிப் பட்டி... மேலும் பார்க்க