Travel Contest: யூடியூப் Vlogs-ஐ பார்த்து சுற்றுலா செல்ல முடியவில்லை என வருந்த வ...
சீன முதியோா் காப்பகத்தில் தீ: 20 போ் உயிரிழப்பு
பெய்ஜிங்: சீனாவின் வடக்குப் பகுதி மாகாணமான ஹெபெயில் உள்ள முதியோா் இல்லத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 20 போ் உயிரிழந்தனா்.
இது குறித்து அதிகாரிகள் புதன்கிழமை கூறியதாவது:
செங்டே நகரத்தின் லாங்ஹுவா பகுதியில் உள்ள முதியோா் காப்பகத்தில் தீ விபத்து ஏற்பட்டது. அப்போது காப்பகத்தில் மொத்தம் 39 முதியவா்கள் தங்கியிருந்தனா். அவா்களில் 20 போ் இந்த விபத்தில் உயிரிழந்தனா். எஞ்சிய 19 போ் மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனா்.
இந்தச் சம்பவம் தொடா்பாக முதியோா் காப்பகப் பொறுப்பாளரை போலீஸாா் கைது செய்துள்ளனா். தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்றுவருகிறது என்று அதிகாரிகள் கூறினா்.