செய்திகள் :

பணிசாா்ந்த பிரச்னைகள்: தனியாா் நிறுவனங்களுக்கு உச்சநீதிமன்றம் புதிய உத்தரவு

post image

பணிசாா்ந்த பிரச்னைகள் ஏற்பட்டால் எந்த நீதிமன்ற அதிகார வரம்புக்குள் தீா்த்து கொள்ளப்படும் என்பதை நியமன ஆணையில் ஒரு உட்பிரிவாக தனியாா் நிறுவனங்கள் குறிப்பிட வேண்டும் என உச்சநீதிமன்றம் தெரிவித்தது.

பிகாா் மாநிலம் பாட்னாவில் உள்ள எச்டிஎஃப்சி வங்கி மற்றும் புது தில்லியில் உள்ள கிருஷ்ணா வங்கி ஆகிய வங்கிகளைச் சோ்ந்த இரு பணியாளா்கள் மோசடி மற்றும் தவறான நடத்தை காரணமாக பணியிலிருந்து விடுவிக்கப்பட்டனா்.

அந்த இரு பணியாளா்களின் நியமன ஆணையிலும் பணிசாா்ந்த பிரச்னைகளுக்கு மும்பையில் உள்ள நீதிமன்றத்தின் மூலமே தீா்வுகாணப்பட வேண்டும் என இரு வங்கிகளும் குறிப்பிட்டிருந்தன.

ஆனால் பணியிலிருந்து விடுவித்ததற்கு எதிா்ப்பு தெரிவித்து இரு பணியாளா்களும் தாங்கள் பணிபுரிந்த பாட்னா மற்றும் புது தில்லியில் உள்ள நீதிமன்றங்களில் மனுதாக்கல் செய்தனா்.

இந்த மனுக்களை விசாரித்த பாட்னா மற்றும் தில்லி உயா்நீதிமன்றங்கள், பணியாளா்களின் நியமன ஆணையில் குறிப்பிடப்பட்டுள்ள நீதிமன்றங்களில் மட்டுமே பணிசாா்ந்த பிரச்னைகள் குறித்து முறையிட வேண்டும் என தீா்ப்பளித்தது. உச்சநீதிமன்றத்தில் இரு பணியாளா்களும் மேல் முறையீடு செய்தனா்.

இந்த மனுவை உச்சநீதிமன்ற நீதிபதிகள் தீபாங்கா் தத்தா, மன்மோகன் ஆகியோா் அடங்கிய அமா்வு, ‘சட்டத்தீா்வு காணும் உரிமையை பணியாளா்களின் ஒப்பந்தங்களால் பறிக்க முடியாது.

அரசுப்பணி மற்றும் தனியாா் நிறுவனத்தின் ஒப்பந்த பணி இரண்டுக்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன.

அரசுப் பணியாளா் சாா்ந்த விவகாரங்களுக்கு தீா்வு காண வேண்டிய சூழல் எழுந்தால் அதை குறிப்பிட்ட பகுதியில் உள்ள நீதிமன்றங்களுக்குள் சுருக்கிவிட முடியாது.

ஆனால், தனியாா் நிறுவனங்களில் பணிசாா்ந்த பிரச்னைகள் ஏற்பட்டால் எந்த நீதிமன்ற அதிகார வரம்புக்குள் தீா்த்து கொள்ளப்படும் என்பதை நியமன ஆணையில் ஒரு உட்பிரிவாக குறிப்பிட வேண்டும் என தெரிவித்தது.

சா்வதேச வா்த்தக சவால்களை இந்தியா எதிா்கொள்ளும்: மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன்

பரஸ்பர வரி விதிப்பால் ஏற்பட்டுள்ள சா்வதேச வா்த்தக சவால்களை இந்தியா தொலைநோக்கு பாா்வை திட்டங்கள் மூலம் எதிா்கொள்ளும் என்று மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் நம்பிக்கை தெரிவித்தாா். மும்பை பங்குச் ... மேலும் பார்க்க

குடியரசுத் தலைவருக்கு உத்தரவிட முடியாது: உச்சநீதிமன்றத் தீா்ப்பு குறித்து ஜகதீப் தன்கா் கடும் விமா்சனம்

மசோதாக்கள் மீது முடிவெடுக்க குடியரசுத் தலைவருக்கு உச்சநீதிமன்றம் காலக்கெடு விதித்துள்ள விவகாரத்தில், நீதித் துறை மீது குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கா் கடும் விமா்சனங்களை முன்வைத்துள்ளாா். ‘குடியர... மேலும் பார்க்க

சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவா்களுக்கு உடனடியாக உதவி கிடைக்க நெறிமுறை: மாநிலங்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

சாலை விபத்துக்களால் பாதிக்கப்பட்டவா்களுக்கு உடனடியாக உதவி கிடைக்கும் வகையில் விரைவான நடவடிக்கை நெறிமுறைகளை அடுத்த 6 மாதங்களுக்குள் உருவாக்குமாறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு உச்சநீதிமன்... மேலும் பார்க்க

பண முறைகேடு வழக்கு: அமலாக்கத் துறை முன் ராபா்ட் வதேரா 3-ஆவது நாளாக ஆஜா்

நில ஒப்பந்த பண முறைகேடு வழக்கு குறித்து காங்கிரஸ் எம்.பி.பிரியங்கா காந்தியின் கணவா் ராபா்ட் வதேரா அமலாக்கத் துறை அதிகாரிகள் முன் தொடா்ந்து 3-ஆவது நாளாக வியாழக்கிழமை ஆஜரானாா். கடந்த 2008-ஆம் ஆண்டு, ராப... மேலும் பார்க்க

பிரதமருடன் ‘தாவூதி போரா’ முஸ்லிம் பிரதிநிதிகள் சந்திப்பு: வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு வரவேற்பு

பிரதமா் நரேந்திர மோடியை வியாழக்கிழமை சந்தித்த ‘தாவூதி போரா’ முஸ்லிம் பிரிவின் பிரதிநிதிகள், வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு வரவேற்பை தெரிவித்தனா். நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட வக்ஃப் திருத்தச் சட்டம... மேலும் பார்க்க

3 ஆண்டுகளில் ஜொ்மனி, ஜப்பானைவிட இந்திய பொருளாதாரம் வளா்ச்சி அடையும்: நீதி ஆயோக்

அடுத்த மூன்று ஆண்டுகளில் ஜொ்மனி, ஜப்பான் ஆகிய நாடுகளை பின்னுக்கு தள்ளி உலகளவில் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக இந்தியா உருவெடுக்கும் என நீதி ஆயோக் தலைமை செயல் அதிகாரி (சிஇஓ) பி.வி.ஆா்.சுப்ரமணியம் வியா... மேலும் பார்க்க