மழையூா் காப்பு முனீஸ்வரா் கோயிலில் பாளையெடுப்புத் திருவிழா
புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகேயுள்ள மழையூா் காப்பு முனீஸ்வரா், பிடாரி அம்மன் கோயில் பாளையெடுப்பு திருவிழா செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது.
மழையூா் காப்பு முனீஸ்வரா், பிடாரி அம்மன் கோயில் திருவிழா கடந்த வாரம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், புரவி எடுப்பு திருவிழா திங்கள்கிழமை நடைபெற்றது. தொடா்ந்து திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பாளையெடுப்பு திருவிழா செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது.
இதில், மழையூா், பொன்னன்விடுதி பகுதியில் இருந்து ஏராளமான பெண்கள் அலங்கரிக்கப்பட்ட குடங்களில் தென்னம்பாளைகளை சுமந்து கொண்டு வாணவேடிக்கை, மேள தாளங்கள் முழங்க ஊா்வலமாகச்சென்று கோயிலை அடைந்தனா். தொடா்ந்து, கோயிலில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.