செய்திகள் :

டாஸ்மாக் சோதனை: உச்ச நீதிமன்றத்திலிருந்து மீண்டும் உயர் நீதிமன்றத்துக்கு வந்த வழக்கு!

post image

சென்னை: டாஸ்மாக் அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் அமலாக்கத் துறை சோதனை நடத்தியதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை, சென்னை உயர் நீதிமன்றத்திலேயே தொடர்ந்து நடத்த தமிழக அரசு முடிவு செய்திருப்பதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டாஸ்மாக் அலுவலகத்தில் அமலாக்கத் துறை சோதனை நடத்தியதற்கு எதிராக தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டு, அது இன்று விசாரணைக்கு வந்த நிலையில், இந்த மனுவை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவிருப்பதாக தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டதற்கு உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் டாஸ்மாக் சோதனைக்கு எதிராக மனு தாக்கல் செய்தபோது, அதனை விசாரித்த உச்ச நீதிமன்றம், இவ்விவகாரத்தில் உயர் நீதிமன்றமே முடிவெடுக்கப்பட்டும் என்று கூறியதால், தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்குரைஞர், மனுவை திரும்பப் பெற்றுக்கொள்வதாக அறிவித்துவிட்டார்.

பின்னர், டாஸ்மாஸ் அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் அமலாக்கத் துறை சோதனை நடத்தியதை எதிர்க்கும் வழக்கை, சென்னை உயர் நீதிமன்றத்திலேயே தெடர்ந்து நடத்த தமிழக அரசு முடிவு செய்திருப்பதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக இன்று காலை நடந்தது பற்றி..

சென்னையில் உள்ள டாஸ்மாக் அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மார்ச் முதல் வாரத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி, மதுபானங்கள் கொள்முதல் செய்தது, பார்களுக்கு அனுமதி வழங்கியதில் ரூ.1000 கோடிக்கு மேல் முறைகேடு நடந்திருப்பதாகத் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில்தான், அமலாக்கத் துறை சோதனையை எதிர்த்து தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி, வழக்கை விசாரிப்பதிலிருந்து தன்னை விலக்கிக் கொண்டார். இதையடுத்து வேறு நீதிபதிகள் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

இன்று காலை வழக்கு விசாரணைக்கு வந்தபோது, வழக்கு விசாரணையை சற்று நேரம் தள்ளிவைக்குமாறு தமிழக அரசு சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டதால், விசாரணை தள்ளிவைக்கப்பட்டிருந்தது.

மீண்டும் வழக்கு விசாரணை தொடங்கியபோது, மீண்டும் அவகாசம் கோரப்பட்டது. இதனால், அதிருப்தி அடைந்த நீதிபதிகள், டாஸ்மாக் வழக்கை விசாரணைக்கு எடுக்க விடாமல் தடுப்பதாகவும், உயர் நீதிமன்றத்தை இழிவுபடுத்துவதாகவும் அரசு வழக்குரைஞருக்கு கண்டனத்தைத் தெரிவித்துக்கொண்டனர்.

அப்போது உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கை எடுத்துச் செல்வது குறித்து வழக்குரைஞர் கூறியதால், வழக்கு நிலுவையில் இருந்தபோதே, உச்ச நீதிமன்றம் செல்வதாகக் கூறியிருந்தால், இந்த வழக்கை இன்று விசாரிக்க பட்டியலிட்டிருக்க மாட்டோம் என்றும் நீதிபதிகள் தெரிவித்திருந்தனர். அது மட்டுமல்லாமல், இந்த மனு பொதுமக்கள் நலனுக்காக தாக்கல் செய்யப்பட்டதா? அல்லது டாஸ்மாக் அதிகாரிகளுக்காக தாக்கல் செய்யப்பட்டதா? குறைந்தபட்சம் நீங்கள் நீதிமன்றத்துக்காவது நேர்மையாக இருக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.

இதற்கு பதிலளித்த தமிழக அரசு வழக்குரைஞர், மாநில அரசின் உரிமையை நிலைநாட்டவே வழக்குத் தொடரப்பட்டதாகக் கூறினார்.

இதைக் கேட்ட நீதிபதிகள், உச்ச நீதிமன்றம் இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டாலும், எடுக்காவிட்டாலும், இந்த வழக்கு தொடர்பாக தமிழக அரசு தரப்பில் வாதங்களை எடுத்துவைத்தே ஆக வேண்டும் என்று உத்தரவிட்டிருந்த நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்திலேயே வழக்கைத் தொடர முடிவு செய்திருப்பதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனியார் ஹஜ் ஒதுக்கீடு ரத்து: பிரதமருக்கு முதல்வர் கடிதம்!

ஹஜ் புனிதப் பயணத்திற்கான பயணிகளை பாதிக்கும் வகையில் தனியார் ஹஜ் ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டிருப்பது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடிக்கு இன்று(ஏப். 16) கடிதம் எழுதியுள்ளார்.அக்கடி... மேலும் பார்க்க

உயர்கல்வி பாடத்திட்டங்களை மாற்றியமைக்க வேண்டும்: முதல்வர் ஸ்டாலின்

உயர்கல்வி பாடத்திட்டங்களை மாற்றியமைக்க வேண்டும் என்று துணைவேந்தர்கள் உடனான ஆலோசனைக் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.தமிழகத்தின் உயர்கல்வியை மேம்படுத்துவதற்காக அனைத்துப் பல்கலைக்கழகங்கள... மேலும் பார்க்க

முதல்வர் தலைமையில் துணை வேந்தர்கள் கூட்டம் தொடங்கியது!

தமிழகத்தில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள், பதிவாளா்களுடனான ஆலோசனைக் கூட்டம் முதல்வர் மு. க. ஸ்டாலின் தலைமையில் தொடங்கியுள்ளது.தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட பல்கலைக்கழக துணைவேந... மேலும் பார்க்க

மலையேற்றம் மேற்கொள்வர்கள் கவனத்துக்கு... 23 வழித்தடங்கள் திறப்பு!

தமிழ்நாட்டில் மலையேற்றத்திற்காக இன்றுமுதல்(ஏப். 16 ) 40 மலையேற்ற வழித்தடங்களில் 23 வழித்தடங்கள் திறக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:த... மேலும் பார்க்க

பள்ளி, கல்லூரி பெயர்களில் உள்ள சாதியை நீக்க உத்தரவு!

தமிழ்நாட்டில் கல்வி நிறுவனங்களின் பெயர்களில் இடம் பெற்றுள்ள சாதிப் பெயர்களை நீக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தென்னிந்திய செங்குந்த மகாஜன சங்கத்தை நிர்வகிக்க சிறப்பு அதிகாரியை நியமித்ததை எ... மேலும் பார்க்க

காலை உணவில் உப்புமாவுக்கு பதில் பொங்கல்! கீதா ஜீவன் அறிவிப்பு!

அரசுப் பள்ளிகளில் வரும் கல்வியாண்டு முதல் காலை உணவுத் திட்டத்தில் உப்புமாவுக்கு பதில் பொங்கல் வழங்கப்படும் என்று அமைச்சர் கீதா ஜீவன் சட்டப்பேரவையில் இன்று (ஏப். 16) அறிவித்துள்ளார்.சட்டப்பேரவையில் சமூ... மேலும் பார்க்க